பொறியியல் கலந்தாய்விற்கான முக்கிய தகவல்கள்!! தமிழக அரசு அறிவிப்பு!!

0
34
Important Information for Engineering Consultation!! Tamil Nadu Government Notification!!
Important Information for Engineering Consultation!! Tamil Nadu Government Notification!!

பொறியியல் கலந்தாய்விற்கான முக்கிய தகவல்கள்!! தமிழக அரசு அறிவிப்பு!!

பன்னிரெண்டாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வுகள் நடந்து முடிந்து, அதன் முடிவுகள் வெளியான நிலையில், மாணவர்கள் அனைவரும் தங்களுக்கு விருப்பமான படிப்புகளை தேர்ந்தெடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கு கலந்தாய்வு செயல்முறை நடைபெற்று வருகிறது. இதற்கான தரவரிசை பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பொறியியல் கலந்தாய்விற்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. அந்த வகையில் பொறியியல் கலந்தாய்வில் கலந்து கொள்ளவதற்கான சில தகவல்களை மாணவர்களுக்கு அரசு வெளியிட்டுள்ளது.

இதன்படி, மாணவர்கள் அனைவரும் கல்லூரிகளை தேர்ந்தெடுப்பதற்கு முன்பாக கல்லூரிகளின் தேர்ச்சி சதவிகிதம் குறித்து தெரிந்திருக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.

சில கல்லூரிகளில் கலந்தாய்விற்கான சதவிகிதம் நூறாக நிரப்ப இருக்கும். ஆனால் சில கல்லூரிகளில் ஐம்பது சதவிகிதமாக மட்டுமே இருக்கும். வளாக நேர்காணல் மூலம் மாணவர்களை தேர்ந்தெடுக்க வரும் நிறுவனங்கள் முதலில் அவர்களின் தேர்ச்சியை தான் பார்ப்பார்கள்.

மாணவர்கள் கல்லூரிகளை தேர்ந்தெடுப்பதற்கு முன்பாக அண்ணா பல்கலைகழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று தேர்ச்சி சதவிகிதம் குறித்த தகவல்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

மேலும், கடந்த ஆண்டு கல்லூரிகள் எவ்வளவு இடங்களை நிரப்பியது என்ற அளவையும் கணக்கில் எடுத்துக்கொண்டு மாணவர்கள் அனைவரும் கல்லூரிகளை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அரசு கூறி உள்ளது.

இது போன்ற தகவல்களை மாணவர்கள் அனைவரும் கலந்தாய்வில் கலந்துக்கொள்ளும் முன்பு அறிந்திருக்க வேண்டும் என்று அரசு மாணவர்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.

author avatar
CineDesk