அடுத்தடுத்து அத்துமீறும் சிங்களப்படை! இதற்கு முடிவே இல்லையா? இலங்கையை கடுமையாக எச்சரிக்க மத்திய அரசிடம் பாமக நிறுவர் வலியுறுத்தல்!

0
196
Increasing online gambling suicides.. Is all this justified?
Increasing online gambling suicides.. Is all this justified?

அடுத்தடுத்து அத்துமீறும் சிங்களப்படை! இதற்கு முடிவே இல்லையா? இலங்கையை கடுமையாக எச்சரிக்க மத்திய அரசிடம் பாமக நிறுவர் வலியுறுத்தல்!

சில மாதங்களுக்கு முன்னதாகவே ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அதனையடுத்த தற்போது 300-க்கும் மேற்பட்ட விசை படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க சென்றுள்ளனர்.அவர்களில் 15 மீனவர்களை, இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துள்ளனர்.

எல்லை மீறி மீன் பிடிக்க வந்ததாக அவர்களை அழைத்து சென்று விசாரணை செய்து வருவதாக கூறுகின்றனர். இந்நிலையில் முன்னதாகவே சிங்கள படையினரின் அத்துமீறல்களை குறித்து பாமக நிறுவனர் கண்டனம் தெரிவித்தார். மேலும் இது குறித்து நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசை வலியுறுத்தினார். தற்பொழுது மீண்டும் 15 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் மத்திய அரசை வலியுறுத்தி தனது ட்விட்டர்  பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது,

வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை சிங்களக் கடற்படை கைது செய்திருக்கிறது. அவர்களின் இரு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. சிங்களப் படையினரின் இந்த அத்துமீறல் கண்டிக்கத்தக்கது.

சிங்களப் படையினரால் கடந்த 27-ஆம் தேதி கைது செய்யப்பட்ட 7 மீனவர்கள் இன்னும் விடுவிக்கப்படவில்லை. 20-ஆம் தேதி கைது செய்யப்பட்டு இரு நாட்கள் முன் விடுவிக்கப்பட்ட 3 மீனவர்கள் இன்னும் சொந்த ஊர் திரும்பவில்லை. அதற்குள்ளாக அடுத்த அத்துமீறல் நடந்திருக்கிறது

மீனவர்கள் கைது செய்யப்பட்டதை தமிழக அரசும், பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளும் கண்டித்து வருகின்றன; இராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டமும் நடத்தியுள்ளனர். அதற்குப் பிறகும் தொடரும் சிங்களப் படையினரின் அத்துமீறலுக்கு இந்திய அரசு எப்போது முடிவு கட்டப் போகிறது

இப்போது கைது செய்யப்பட்ட 15 மீனவர்களையும், ஏற்கனவே சிறைபட்ட 7 பேரையும் உடனடியாக மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மீனவர்களை இனி கைது செய்யவோ, தாக்கவோ கூடாது என்று இலங்கை அரசை மத்திய அரசு கடுமையாக எச்சரிக்க வேண்டும்

தமிழக மீனவர்களை இவ்வாறு இலங்கை கடற்படையினர் கைது செய்து விசாரிப்பதை மத்திய அரசு கண்டிக்க வேண்டும்மென்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்துயுள்ளார்.

Previous articleநாங்கள் எப்படி வேண்டுமானாலும் பேசுவோம்.. நீங்கள் பேச கூடாது! ஸ்டாலினை அவதூறாக பேசிய பாஜக பிரமுகர் கைது! 
Next articleஅந்த வீடியோவை பார்த்த பத்து வயது சிறுவன் 3 வயது சிறுமிக்கு செய்த அவலம்! பின்னணியில் இருக்கும் செல்போன்!