முதலமைச்சர் முன்னால் கிடந்த செருப்பு!! பதறி அடித்து எடுத்த அமைச்சர்!!

Photo of author

By Gayathri

தமிழகத்தில் தற்பொழுது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருக்கும் சேகர் பாபுவின் வீடியோ ஒன்று தற்பொழுது இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

அந்த வீடியோவில், முதலமைச்சரின் முன்னால் செருப்பு ஒன்று கிடந்துள்ளது. முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் அதனை கண்டு கொள்ளாமல் சென்ற பொழுது அமைச்சர் சேகர்பாபு அவர்கள் முந்தி சென்று அந்த சிறப்பினை நகர்த்தி வைக்கும் வீடியோ தான் அது. இந்த வீடியோவின் மூலம் பலவிதமான சர்ச்சை பேச்சுக்கள் பேசப்பட்டு வருகின்றன.

அதில், ஏற்கனவே, திமுகவிற்கு அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கொத்தடிமை வேலை செய்கின்றனர் என்றும், உதயநிதி, இன்ப நிதி என்று அவர்களது அடிமைத்தனம் நீண்டு கொண்டே போகிறது என்றும் கூறப்பட்டு வரும் நிலையில், அமைச்சரின் இந்த செயலானது அதை நிரூபிக்கும் விதமாக அமைந்துள்ளது என்று கூறப்படுகிறது.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ஜனவரி 2011-இல் அதிமுகவில் இருந்து திமுகவிற்கு கட்சி தாவியவர்.அதன் பின், 2016 இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட அவர் தனக்கு எதிராக போட்டியிட்ட அதிமுக வேட்பாளரை தோற்கடித்து வெற்றி பெற்றார். தொடர்ந்து அவர் 2021 சட்டப்பேரவைத் தேர்தலிலும் போட்டியிட்டு ஜெயித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைச்சர் பதவியை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.