ஸ்டொமக் அல்சர் மற்றும் மவுத் அல்சர் பிரச்சனைக்கு தீர்வு இந்த கீரையில் உள்ளது!! தினமும் ஒருகைப்பிடி சாப்பிடுங்க!!

Photo of author

By Divya

ஸ்டொமக் அல்சர் மற்றும் மவுத் அல்சர் பிரச்சனைக்கு தீர்வு இந்த கீரையில் உள்ளது!! தினமும் ஒருகைப்பிடி சாப்பிடுங்க!!

Divya

இன்றைய காலகட்டத்தில் பலரும் அல்சர் பிரச்சனையால் அவதியடைந்து வருகின்றனர்.இந்த அல்சர் புண்கள் பல்வேறு காரணங்களால் உருவாகிறது.அல்சரில் பல வகைகள் இருக்கிறது.இதில் பெரும்பாலானோருக்கு வயிறு அல்சர் மற்றும் வாய் அல்சர் பாதிப்பு இருக்கிறது.

வாயில் புண்கள் இருந்தால் வயிற்றிலும் புண்கள் இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.இந்த அல்சர் புண்களை நமது வீட்டில் இருக்கின்ற பொருட்களை வைத்து குணப்படுத்திக் கொள்ள முடியும்.

வாய் மற்றும் வயிறு அல்சருக்கான காரணங்கள்:

1)உணவு தவிர்த்தல்
2)காரமான உணவுகள்
3)மோசமான உணவுப் பழக்க வழக்கம்
4)புகையிலை பழக்கம்
5)புகைப்பழக்கம்
6)மது அருந்துதல்
7)குடல் வறட்சி
8)ஊட்டச்சத்து குறைபாடு

வாய் அல்சர் மற்றும் வயிறு அல்சரை குணப்படுத்த வழிகள்:

மணத்தக்காளி கீரை

தினமும் ஒரு கைப்பிடி மணத்தக்காளி கீரையை அரைத்து சாறு எடுத்து பருகி வந்தால் வாய் மற்றும் வயிறு அல்சர் குணமாகும்.வாய் ஓரத்தில் மணத்தக்காளி கீரை சாறை பூசினால் அவை சீக்கிரம் குணமாகிவிடும்.

மோர் மற்றும் வெந்தயம்

பசுந்தயிரில் இருந்து மோர் தயாரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு வெந்தயத்தை வறுத்து பொடித்து மோரில் கலந்து பருகினால் வாய் அல்சர் மற்றும் வயிறு அல்சர் புண்கள் ஆறும்.

பெருஞ்சீரகம்

தினமும் ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகத்தை வாயில் போட்டு மென்று சாப்பிட்டால் அல்சர் புண்கள் குணமாகும்.

அகத்தி கீரை

வாரம் இரண்டு அல்லது மூன்று முறை அகத்தி கீரை பொரியல்,அகத்தி கீரை சூப் அல்லது அகத்தி கீரை ஜூஸ் செய்து உட்கொண்டு வந்தால் அல்சர் புண்கள் குணமாகும்.

அதிமதுர சூரணம்

ஒரு கிளாஸ் வெது வெதுப்பான தண்ணீரில் ஒரு தேக்கரண்டி அதிமதுர சூரணம் மற்றும் சிறிது தேன் மிக்ஸ் செய்து பருகி வந்தால் அல்சர் புண்கள் குணமாகும்.

திரிபலா சூரணம்

ஒரு கிளாஸ் வெது வெதுப்பான தண்ணீரில் ஒரு தேக்கரண்டி திரிபலா சூரணம் மற்றும் சிறிது தேன் மிக்ஸ் செய்து பருகி வந்தால் அல்சர் புண்கள் குணமாகும்.