இரத்தசோகை இரும்புச்சத்து குறைபாட்டால் ஏற்படும் ஒரு நோய் பாதிப்பாகும்.ஆண்களை விட பெண்களே இரத்த சோகை நோய்க்கு அதிகளவு ஆளாகி வருகின்றனர்.இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு சாதாரண நிலையை விட குறைந்தால் இரத்த சோகை ஏற்படும்.
இரத்த சோகை அறிகுறிகள்:
1.உடல் பலவீனம்
2.மயக்கம்
3.தலைவலி
4.சுவாசப் பிரச்சனை
5.முடி உதிர்தல்
இரத்த சோகையை குணப்படுத்த அத்திப்பழம் பெரிதும் உதவுகிறது.இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச் செய்கிறது.
அத்திப்பழத்தில் நிறைந்துள்ள சத்துக்கள்:
*கால்சியம் *இரும்பு *பொட்டாசியம் *புரதச்சத்து *நார்ச்சத்து *தாமிரம்
அத்திப்பழத்தை தேன் அல்லது பாலில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் அதிக நன்மைகள் கிடைக்கும்.சரும பாதிப்பு,இரத்த சர்க்கரை போன்ற பாதிப்புகள் குணமாகும்.உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் அத்திப்பழத்தில் உள்ளது.
இரத்த சோகையை குணமாக்கும் அத்திப்பால் தயாரிக்கும் முறை:
தேவைப்படும் பொருட்கள்:
1)அதித்திப்பழம்
2)பால்
3)தேன்
செய்முறை விளக்கம்:
முதலில் கால் கிலோ அத்திப்பழம் வாங்கிக் கொள்ளுங்கள்.பிறகு இதை தண்ணீரில் போட்டு கழுவி எடுத்துக் கொள்ளுங்கள்.
அதன் பிறகு அத்திப்பழத்தின் காம்பை நீக்கி கொள்ளுங்கள்.இதை இட்லி பாத்திரத்தில் போட்டு 5 நிமிடங்கள் ஆவியில் வேக வையுங்கள்.
பிறகு இதை ஆறவிட்டு ஒரு காட்டன் துணியில் வைத்து வெயிலில் நன்கு உலர வையுங்கள்.இவ்வாறு செய்தால் அத்திப்பழம் நன்கு உலர்ந்துவிடும்.பிறகு ஒரு கண்ணாடி பாட்டிலில் அத்திப்பழத்தை போட்டு தேவையான அளவு தேன் ஊற்றி ஊறவிடுங்கள்.
தேனில் ஊறவைத்த அத்தி பழத்தை இரண்டு நாட்களுக்கு பின்னரே பயன்படுத்த வேண்டும்.இப்பொழுது பாத்திரம் ஒன்றில் ஒரு கிளாஸ் பால் ஊற்றி அடுப்பில் வைத்து காய்ச்சுங்கள்.
பின்னர் இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி தேனில் ஊறவைத்த அத்தியை போட்டு ஊறவைத்து பருகினால் இரத்தசோகை குணமாகும்.
தேவைப்படும் பொருட்கள்:
1)முருங்கை கீரை
2)தேன்
செய்முறை விளக்கம்:
ஒரு கைப்பிடி முருங்கை இலையை அரைத்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து பருகுங்கள்.இவ்வாறு செய்தால் இரத்த சோகை பாதிப்பு குணமாகும்.