டம்மி வரி என்று நினைத்து எழுதப்பட்ட பாடல்.. சூப்பர் டூப்பர் ஹிட்டானாது – வைரமுத்து எதை கூறுகிறார் தெரியுமா??
தமிழ் படங்களில் பல அற்புத பாடல்கள் உருவாக காரணமாக இருந்தவர்களில் ஒருவர் பாடலாசிரியர் வைரமுத்து.இதுவரை 5800க்கும் அதிகமான பாடல்களை எழுதி இருக்கும் இவர் இளையராஜா,ஏ.ஆர்.ரகுமானுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார்.
இவர் பாடல் வரிகளில் இரட்டை அர்த்தத்தை புகுத்தக் கூடிய திறமை கொண்ட பாடலாசிரியர்.ஆபாச வார்தைகளை கூட அனைவரும் ரசிக்கும் படியான அர்த்தத்தில் எழுதி இருக்கும் வைரமுத்து அவர்கள் குஷி படத்தில் வரும் சூப்பர் டூப்பர் ஹிட் பாடலான “கட்டிப்புடி கட்டிப்புடிடா” பாடல் எவ்வாறு உருவானது என்பது குறித்த சுவாரஸ்ய தகவலை பேட்டி ஒன்றில் பகிர்ந்திருக்கிறார்.
கடந்த 2000 ஆம் ஆண்டு எஸ்.ஜே சூர்யா இயக்கத்தில் விஜய்,ஜோதிகா,விஜயகுமார்,விவேக் உள்ளிட்ட பலர் நடித்து வெளிவந்த படம் குஷி. படத்தின் ஹிட்டுக்கு இசையமைப்பாளர் தேவாவின் இசை மற்றும் வைரமுத்துவின் பாடல் வரிகள் முக்கிய காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
அதிலும் விஜய் மற்றும் மும்தாஜ் இணைந்து நடனமாடிய “கட்டிப்புடி கட்டிப்புடிடா” பாடலுக்கு இணையான ஒரு பாடல் இதுவரை உருவாகவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.பாடலின் ஹைலைட் வரிகளே “கட்டிப்புடி கட்டிப்புடிடா” தான்.அப்படி இருக்கையில் வைரமுத்து எழுதிய இந்த பாடலில் “கட்டிப்புடி கட்டிப்புடிடா” வரி முதலில் இடம் பெறவில்லை.தேவா அவர்கள் ‘ஒரு கமர்ஷியல் சாங்’ மாதிரி இருக்க வேண்டும் என்று கேட்ட பின்னர் ஒரு டம்மியாக தான் “கட்டிப்புடி கட்டிப்புடிடா கண்ணாளா கண்டபடி கட்டிப்புடிடா” வரியை சேர்த்திருக்கிறார்.
இந்த வரிகள் இயக்குநர் எஸ்.ஜே சூர்யாவிற்கு பிடித்து போக இதை பாட்டின் தொடக்க வரிகளாக வைத்து கொள்ளலாமா என்று எண்னிடம் தேவா கேட்டார்.நானும் இதையே வைத்துக் கொள்ளுங்கள் என்று சொன்ன பின்னர் பாடல் ரெக்கார்டிங் முடிந்தது.இப்படி தான் கட்டிப்புடி கட்டிப்புடிடா பாடல் உருவானது என்று வைரமுத்து கூறி இருக்கிறார்.