ஆருத்ரா கோல்டு நிறுவன இயக்குனரிடம் கூடுதல் விசாரனை!! சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!!

Photo of author

By Savitha

ஆருத்ரா கோல்டு நிறுவன இயக்குனரிடம் கூடுதல் விசாரனை!! சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!!

சென்னை அமைந்தகரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்டு நிறுவனம், பொதுமக்களிடம் முதலீடாக பெற்ற 2,438 கோடி ரூபாயை மோசடி செய்ததாக, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கின் அடிப்படையில் அந்நிறுவனத்தின சொத்துக்கள் முடக்கப்பட்டன. நிறுவனத்தின், நிர்வாக இயக்குனர்கள் ராஜசேகர், உஷா ராஜசேகர், மைக்கேல் ராஜ் ஆகியோர் வெளிநாட்டில் தலைமறைவாகினர்.

இந்நிலையில், அந்நிறுவனத்தின் இயக்குனரும், பாரதிய ஜனதா கட்சி நிர்வாகியுமான ஹரீஷ் மற்றும் மற்றொரு இயக்குனரான மாலதி ஆகியோர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர்.

ஹரீஷை 4 நாட்களும், மாலதியை ஒரு நாளும் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க பொருளாதார குற்றப்பிரிவுக்கு அனுமதியளித்து, நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

போலீஸ் காவல் முடிந்து இருவரும் நீதிபதி கருணாநிதி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், ஹரீஷை மேலும் ஆறு நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி பொருளாதார குற்ரப்பிரிவு தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அதனை ஏற்ற நீதிபதி, ஏப்ரல் 6 ம் தேதி வரை ஹரீஷை போலீஸ் காவலில் வைக்க விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.