தமிழக வெற்றி கழகத்தின் முதல் அரசியல் மாநாடு விழுப்புரம் விக்கிரவாண்டி வி. சாலையில் நேற்று நடைபெற்றது. இலட்சக்கணக்கான தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் விஜய் தங்களது கொள்கைகளையும் கோட்பாடுகளையும் செயல் திட்டங்களையும் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் இளைய சமுதாயம் திமுகவை ஏற்றுக் கொள்ளவில்லை.
என்பது விஜய் மாநாட்டில் கலந்து கொண்ட இளைஞர்களின் வாயிலாக புரிந்து கொள்ள முடிகிறது. வாரிசு அரசியலை விரும்பாத இளைஞர்கள் தன்னெழுச்சியாக விஜய் மாநாட்டில் பங்கேற்று உளளனர். விஜய்யின் மாநாடு சிறந்த துவக்கமாக கிராண்ட் ஓப்பனாக அமைந்துள்ளது வரவேற்கத்தக்கது.மேலும் அவர் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் ஐ சுட்டிக்காட்டி தமிழக வெற்றிக்கழக மாநாட்டில் பேசியதை வரவேற்பதாக கூறினார்.
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்பதை முதன் முதலில் செயல்படுத்தியவர் மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆர்.விடியா அரசை தமிழக மக்கள் எதிர்க்கிறார்கள் என்பதற்கு தமிழக வெற்றிக்கழக மாநாடு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது. இந்த மாநாட்டினால் அதிமுகவுக்கு எள் அளவு கூட பாதிப்பில்லை. ஆளும் கட்சிக்கு தான் தமிழக வெற்றிக்கழகம் மிகப் பெரும் பாதிப்பாக இருக்கப் போகிறது. விஜய்யின் பேச்சு ஒட்டுமொத்த மக்களின் கவனத்தை ஈர்த்திருந்தாலும் கூட இந்த மாநாட்டை தொகுத்து வழங்கிய பெண்ணின் குரல் பலருக்கும் பிடிக்கவில்லை.
பலரும் அந்த பெண்ணின் குரல் மாநாட்டை கெடுத்து விட்டதாகவும் வேற நபரே கிடைக்கவில்லையா என்றனர். இவர் ஆரம்பத்திலிருந்து விஜய் குறித்து பல கவிதைகளை எழுதி வந்த நிலையில் அவருக்கு தமிழக வெற்றி கழகம் கட்சியில் பேச்சாளராக சேர்ந்தார். விஜய்யின் தீவிர ரசிகையாக இருந்து வந்த துர்கா தேவியின் கவிதைகளை பார்த்து அவருக்கு வாய்ப்பு கொடுத்தது தாவெக காட்சி.
ஆனால் அவரது குரல் வளம் சரியில்லை. அவரைவிட நல்ல குரல் வளம் மிக்க ஆளை தேர்ந்தெடுத்து இருக்க வேண்டும் என்பதுதான் மக்களின் பரவலான கருத்தாக தற்போது இருந்து வருகிறது.