1 முறை இப்படி ஆவி பிடியுங்கள்.. நெஞ்சுசளி தலைபாரம் என்ற பேச்சுக்கே இடமிருக்காது!!
நம்மில் பலருக்கும் மூக்கடைப்பு,தலைவலி பாரம் என சளி பிடிக்கும் நேரத்தில் இருக்கும்.அவர்கள் அனைவரும் ஆவி பிடித்தலே அதிலிருந்து விடுபட்டுவிடலாம்.குறிப்பாக சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் ஆவி பிடிப்பதால் அவர்களின் மூக்கு துவாரங்களில் உள்ள அடைப்பு நீங்கி சற்று நிமாதியா தூக்கத்திற்கு அது வழிவகுக்கும்.அந்தவகையில் ஆவி பிடிக்கும் பொழுது என்னென்ன மூலிகைகள் சேர்க்கலாம்,எது சேர்த்தால் என்ன பயன் என்பதை பார்க்கலாம்.
ஆவி பிடிப்பதின் பயன்கள்:
ஆவி பிடிப்பதால் உடலில் பல மாற்றங்கள் உண்டாகும்.முதலில் தலைவலி தலைபாரம் போன்றவைக்கு நல்ல நிவரானமாக இது விளங்கும்.இதனைத்தொடர்ந்து நுரையீரலுக்கு மேலும் ஆரோக்கியத்தை ஏற்படுத்தும்.அதுமட்டுமின்றி நமது முகம் பொலிவுடன் இருக்க உதவும்.நமது முகத்தில் உள்ள கெட்ட அழுக்குக்களை வெளியேற்றும்.
ஆவி பிடிக்க உபயோகிக்க வேண்டிய பொருட்கள்:
நொச்சி
வேப்பிலை
துளசி
புதினா
தைல மரம் இலை
மஞ்சள்
சீரகம்
ஓமம்
மிளகு
சுக்கு
கிராம்பு
உப்பு
இந்த அனைத்து பொருட்களையும் ஆஒ துணியில் கட்டி கொதிக்கும் நீரில் அப்படியே 5 நிமிடம் விட்டுவிட வேண்டும்.
5 நிமிடம் கழித்து ஆவி பிடிக்கும் பொழுது நமது தலைவலி,தலைபாரம்,மார்பு சளி போன்றவற்றை குணமாக்கும்.
அதேபோல உணவு சாப்பிடுவதற்கு முன் இதனை செய்ய வேண்டும்.