மூடிய அறையில் வந்த துர்நாற்றம்! பதறிய உணவக ஊழியர்கள்!

0
197
The stench that came from the closed room! Restaurant staff!
The stench that came from the closed room! Restaurant staff!

மூடிய அறையில் வந்த துர்நாற்றம்! பதறிய உணவக ஊழியர்கள்!

கோவையில் காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் பிரபல தனியார் ஹோட்டல் ஒன்று உள்ளது. இது நன்றாக இயங்கி வருகிறது. நாள்தோறும் வாடிக்கையாளர்கள் அறை எடுத்து அங்கு தங்குவதும் வாடிக்கையான ஒன்றுதான். இந்த நிலையில் ஹோட்டலில் ஒரு அறையில் இருந்து மட்டும் துர்நாற்றம் வீசியதால் பணியாளர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் பணியாளர்கள் அறையைத் திறந்து பார்த்தபோது, ஒருவர் பலத்த காயங்களுடன் இறந்து அழுகிய நிலையில் சடலமாக கிடந்தார். அதை பார்த்த ஊழியர்கள் பதறிப்போனார்கள். மேலும் அதே அறையில் ஒருவர் பலத்த காயங்களோடு உயிருடன், மயங்கிய நிலையில் இருந்தார். இதனை கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்த ஹோட்டல் பணியாளர்கள் உடனடியாக பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர். மேலும் அவர்களது அறையில் ஒரு எலி மருந்து பேஸ்ட்டும் இருந்து உள்ளது.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் அதே போல் காயங்களுடன் இருந்த நபரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையின் மூலம் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

இவர்கள் இருவரும் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த கோழிக்கோடு பகுதியை சேர்ந்த முஸ்தபா என்ற 58 வயதானவரும், பிந்து என்ற 46 வயதானவரும் என்பது தெரியவந்தது. இவர்கள் இருவரும் கள்ள காதல் ஜோடி என்பதும் தெரியவந்தது. இந்த இரண்டு பேரும் கடந்த 26ம் தேதி முதல் இங்கு அறை எடுத்து தங்கி வந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பே அந்த பேண் உயிர் இழந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து காட்டூர் போலீசார் கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணங்களா? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிகிச்சையில் இருப்பவர் குணமடைந்து வாக்குமூலம் அளித்தால் மட்டுமே அனைத்து கேள்விகளுக்கும் விடை கிடைக்கும் எனவும் காத்துள்ளனர்.

Previous articleதமிழகத்தில் ஸ்பெஷலிஸ்ட் டாக்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும்! டாக்டர் ராமதாஸ் எச்சரிக்கை!
Next articleவங்கி கணக்கில் 500 அதிகரிப்பு! இன்று முதல் எடுத்துக் கொள்ளலாம்!