கண்ணிமைக்கும் நொடியில் மாணவன் பலி! போலீசார் வழக்கு பதிவு!
தூத்துக்குடி மாவட்டம் பிரையண்ட் நகர் 7 வது தெருவை சேர்ந்தவர் அகஸ்டின்.இவருடைய மகன் சாம்(22).இவர் பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.இவர் தூத்துக்குடி அருகே அத்திமரப்பட்டி சாலையில் நேற்று இரவு மோட்டர்சைக்கிள்லில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவர் விவசாய சங்க அலுவலகம் அருகில் சென்று கொண்டிருந்த போது மோட்டர்சைக்கிள் நிலைதடுமாறி பள்ளத்தில் விழுந்துள்ளார்.அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். மேலும் இந்த விபத்து குறித்து முத்தையாபுரம் போலீசார்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அந்த தகவலின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.