பள்ளி முதல்வரை துப்பாக்கியால் சுட்ட மாணவன்:! மாணவனை திட்டியதால் ஏற்பட்ட விபரீதம்!!

0
175

பள்ளி முதல்வரை துப்பாக்கியால் சுட்ட மாணவன்:! மாணவனை திட்டியதால் ஏற்பட்ட விபரீதம்!!

திட்டியதால் பள்ளி முதல்வரை துப்பாக்கியால் சுட்ட 12 ஆம் வகுப்பு மாணவன் கைது!

உத்திரபிரதேசம் மாநிலம் சீதாப்பூர் பகுதியைச் சேர்ந்த குரீந்தர் சிங் என்னும் மாணவன் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறான்.இவனுக்கும் பள்ளியில் படிக்கும் மற்றொரு சக மாணவனுக்கும் இடையே கடந்த வெள்ளிக்கிழமையன்று தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் குரீந்தர் சிங்கை பள்ளி முதல்வர் ராம் சிங் வர்மா கண்டித்துள்ளார்.இதனால் ஆத்திரம் அடைந்த அந்த மாணவன் நேற்று ராம் சிங்கை ராம்ஸ்வரூப் கல்லூரியில் வைத்து இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டுள்ளான்.இந்த துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்த முதல்வரை லக்னோவில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இது குறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவே,சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அந்த மாணவரை அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர்.

Previous article“வன்முறை கலாச்சாரத்தை அனுமதிக்க கூடாது” மக்கள் நீதிமய்யம் தலைவர் கமலஹாசன் வலியுறுத்தல்!!
Next articleதமிழ்நாடு அமைதிப்பூங்காவாக தொடர இதை செய்ததாக வேண்டும் – மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்