களியக்காவிளையில் உள்ள அரசு பள்ளியில் மாணவிக்கு மாணவன் தாலி கட்டிய போட்டோ இணையத்தில் பரபரப்பாக வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததையடுத்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு உள்ளதால் முன்கூட்டியே பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது
இந்த நிலையில் பள்ளிகளில் கொரோனா கட்டுப்பாடுகளுடன் வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில், கன்னியாகுமரி களியக்காவிளை அடுத்த பளுகல் பகுதியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் தன்னுடன் படிக்கும் சக மாணவிக்கு தாலி கட்டிய போட்டோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த புகைப்படம் கடந்த 2ஆம் தேதி எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் மாணவியை திருமணம் செய்த மாணவனுக்கு சக மாணவ மாணவிகள் அனைவரும் அவர்களின் மேல் காகிதங்களை கிழித்து மலர்களை போலத் தூவி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதை உடனிருந்த மாணவர் செல்போனில் புகைப்படமாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். தற்போது குமரி முழுவதும் இந்த போட்டோ வைரலானதை தொடர்ந்து, மாணவியின் தந்தை ஜஸ்டின் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து போலுசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி வகுப்பறையில் மாணவிக்கு தாலிக்கட்டும் சம்பவம் இது முதன்முறையல்ல.
பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பும் பெற்றோர்கள் இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்துள்ளனர். இது குறித்து குமரி மாவட்ட பள்ளி கல்வித்துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காகிதங்களை கிழித்து சக மாணவர்கள் மலர்களைப் போல தூவி வாழ்த்துகள் கூறியதை வைத்தும் வைரலான புகைப்படங்களை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.