நீட் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவி! குவியும் பாராட்டுகள்!

Photo of author

By Parthipan K

நீட் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவி! குவியும் பாராட்டுகள்!

Parthipan K

The student who topped the NEET exam! Accumulating praise!

நீட் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவி! குவியும் பாராட்டுகள்!

மருத்துவ படிப்பிற்கு நுழைவு தேர்வாக நீட் தேர்வு நடத்தப்படுகிறது.அந்த வகையில் நடப்பு கல்வியாண்டுக்கான நீட் தேர்வு கடந்த ஜூலை மாதம் 17 தேதி நடந்தது. இந்த தேர்வில் நாடு முழுவதும் 18 லட்சத்து 72 ஆயிரம் பேர் பதிவு செய்தனர். இந்நிலையில் நீட் தேர்வு முடிவு நேற்று இரவு 11 மணிக்கு வெளியானது. மேலும் ஒன்பது லட்சத்திற்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

நடப்பாண்டில் தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை அதிகம். ஆனால் தேர்ச்சி சதவீதம் கடந்த ஆண்டின் தேர்ச்சி சதவீதத்தைவிட குறைவு. இந்த தேர்வில்  ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தனிஷ்கா முதலிடம் பிடித்துள்ளார். மேலும் டெல்லியை சேர்ந்த வத்ஸா ஆசிஷ் பாத்ரா என்பவர் இரண்டாம் இடம் பெற்றுள்ளார்.