பள்ளிக்கு சென்ற மாணவன் நொடியில் மரணம் .!பரபரப்பில் அப்பகுதி மக்கள்!..
ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்துள்ள ஆர்எஸ் கொம்மக் கோவில் பகுதியை சேர்ந்த தான் இளஞ்செழியன்.இவரது மகன் கபிலன் வயது பன்னிரண்டு.இவர் பெருந்துறை ஆர்எஸ் பகுதியிலுள்ள அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று சுதந்திர தின விழா நிகழ்வுக்காக பள்ளிக்கு தனது தங்கையுடன் சென்றார் கபிலன்.பிறகு தனது தங்கை வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தான். இவர்கள் இருவரும் எமரால்டு சிட்டி பகுதியில் வந்தபோது அவ்வழியாக வந்த ஒரு பைக் எதிர்பாராதவிதமாக திடிரென்று கபிலன் மீது மோதியது.
இதில் தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது.இந்நிலையில் அங்கிருந்த சிலர் அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது தொடர்பாக வெள்ளோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளிக்குச் சென்ற சிறுவன் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.