கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வெள்ளி மலைக்கு அருகே இன்னாடு என்ற கிராமத்தில் மாணவ மாணவிகள் அங்கேயே தங்கி படிக்கும் வண்ணம் உருவாக்கப்பட்ட அரசு மலைவாழ் உண்டு உறைவிட தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்தப் பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தொங்கிப் பிடித்து வரும் நிலையில், அவர்களுக்கான உணவு சமைக்கும் இடம் அவர்களுடைய பக்கத்து அறையிலேயே இருந்து வந்துள்ளது. இங்கு சமைக்கப்படும் சமையல் பாத்திரங்களை சமையல் பணியாளர் அல்லது அவருடைய உதவியாளர் கழுவாமல் அங்கு பயலக்கூடிய மாணவர்களை பாத்திரங்களை கழுவ செய்து வந்துள்ளனர்.
இதனை ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து, அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருக்கிறார். இந்த வீடியோவை பார்த்த பலரும் இவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வந்த நிலையில், இவர்களை பணியிடை நீக்கம் செய்த அரசு உத்தரவிட்டுள்ளது.
அதாவது, பள்ளியின் தலைமை ஆசிரியரான ஜெபஸ்டின் மற்றும் சமையல் பணியாளரான ராதிகா இருவரையும் உடனடியாக பணியிடை நீக்கம் செய்து கள்ளக்குறிச்சி மாவட்ட பழங்குடியினர் நல அலுவலர் சுந்தரம் அவர்கள் உத்தரவிட்டிருக்கிறார்.
பள்ளிகளில் இது போன்ற செயல்பாடுகள் இன்னும் ஒரு சில இடங்களில் நடைபெற்று தான் வருகிறது. அவை வெளிச்சத்திற்கு வரும் பொழுது நிச்சயமாக அதற்கான தண்டனையை அவர்கள் பெறுவார்கள் என்பது இதன் மூலம் தெளிவுபடுகிறது.