கொரோனா உலகளவில் படிப்படியாக உச்சகட்ட நிலையை அடைகிறது என ஆய்வில் தகவல் !

0
199
The study reported that the corona is gradually reaching its peak worldwide!
The study reported that the corona is gradually reaching its peak worldwide!

கொரோனா உலகளவில் படிப்படியாக உச்சகட்ட நிலையை அடைகிறது என ஆய்வில் தகவல் !

உலக அளவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 55.05 கோடியாக உயர்ந்து வருகிறது.இதை தொடர்ந்து வாஷிங்டன் உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் இரண்டு ஆண்டுகளை கடந்து மேலும் தீவிரமாகி  வருகிறது.சீனாவின் உகான் நகரில் 2019ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் முதன்முறையாக கொரோனா பெருந்தொற்று பாதிப்புகள் கண்டறியப்பட்டு வெளியுலகிற்கு அறிமுகமானது.தற்போது கொரோனா வைரஸ் 225 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரும் உச்சகட்ட நிலையை அடைந்தது.கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து கொண்டே தான் செல்கிறது .டெல்டா, டெல்டா பிளஸ், ஒமைக்ரான் என்று உருமாறி வரும் வகைகளால் பல நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.இந்நிலையில் உலகம் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55 கோடியே 5 லட்சத்து 77 ஆயிரத்து 406 ஆக அதிகரித்துள்ளது. தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே 87 லட்சத்து 56 ஆயிரத்து 796 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.கொரோனாவில் இருந்து இதுவரை 52 கோடியே 62 லட்சத்து 46 ஆயிரத்து 203 பேர் குணமடைந்துள்ளனர். இந்த எண்ணிக்கை 52 கோடியே 44 லட்சத்து 30 ஆயிரத்து 716 ஆக நேற்று இருந்தது.கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 63 லட்சத்து 53 ஆயிரத்து 574 பேர் உயிரிழந்தார்கள்.கொரோனா அதிகம் பாதித்த நாடுகளின் வரிசையில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது .அந்நாட்டில் இதுவரை 8.90 கோடி பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாகவும் இதனை தொடர்ந்து இந்தியா4.34 கோடிமற்றும் பிரேசில்3.22 கோடி ஆகியவை அடுத்தடுத்த இடத்தில் உள்ளதாவும் தகவல் வெளியாகியுள்ளது.உலக அளவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 55.05 கோடியாக உயர்ந்து உள்ளதாகவும் குணமடைந்தவரின் எண்ணிக்கை அளவு அதிகரித்து வருவதையும் கணக்கிடப்பட்டு வருகின்றனர்.

Previous articleSBI வங்கியில் வேலைவாய்ப்பு! மாதம் ரூ.60,000 வரை ஊதியம்!
Next articleரேஷன் கடைகளில் அமலுக்கு வரும் திட்டம்! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!