வந்தாச்சு வாரிசு ட்ரெய்லர்! செம குஷியில் ரசிகர்கள்!

Photo of author

By Amutha

வந்தாச்சு வாரிசு ட்ரெய்லர்! செம குஷியில் ரசிகர்கள்!

இளைய தளபதி விஜய் நடித்து தில் ராஜு தயாரிப்பில் தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் படம்தான் வாரிசு. முழுக்க முழுக்க குடும்ப பின்னணி அமைப்பை கொண்ட இந்த படத்தில் விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

மேலும் இவர்களுடன் பிரபு, பிரகாஷ்ராஜ் சரத்குமார் குஷ்பூ யோகிபாபு உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

பொங்கலுக்கு வெளிவர இருக்கும் இந்த படத்தினை நான்கு முக்கிய நகரங்களில் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது.

கடந்த டிசம்பர் 24ஆம் தேதி அன்று இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. அப்போது விஜய் பாடிய ரஞ்சிதமே, சிம்பு பாடிய தீ தளபதி மற்றும் அம்மா சென்டிமென்ட் பாடல் வெளியிடப்பட்டு மிகுந்த வரவேற்பு பெற்றது.

இதனை அடுத்து வாரிசு படத்தின் டிரைலர் எப்போது வெளியிடப்படும் என ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருந்தனர். இந்நிலையில் வாரிசு படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி ஜனவரி 2ஆம் தேதி படத்தின் டிரைலர் வெளியிடப்படும் என்று தெரியவந்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை போஸ்டருடன் வெளியாகும் என தெரிகிறது. இதை அறிந்ததும் ரசிகர்கள் செம கொண்டாட்டத்தில் உள்ளனர்.