ஓய்வூதிய திட்டத்திற்கு புதிய நடைமுறை அமல்! நீங்களே உங்களுடைய பென்ஷன் முறைய தேர்வு செய்து கொள்ளலாம்!

0
115
New procedure for pension scheme! You can choose your own pension system!
New procedure for pension scheme! You can choose your own pension system!

ஓய்வூதிய திட்டத்திற்கு புதிய நடைமுறை அமல்! நீங்களே உங்களுடைய பென்ஷன் முறைய தேர்வு செய்து கொள்ளலாம்!

மத்திய அரசானது கடந்த 2003 ஆம் ஆண்டு பழைய ஓய்வூதிய  திட்டத்தை ரத்து செய்தது.அதற்கு பதிலாக புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தியது அதனால் பல்வேறு மாநிலங்களும் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் மத்திய அரசின் ஓய்வூதியத்தை பின்பற்றி வருகின்றது.புதிய ஓய்வூதிய திட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு குறைவான சலுகைகள் கிடைப்பதால் மத்திய மாநில அரசுகள் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வரவேண்டும் என  நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆட்சி செய்யும் ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்கண்ட், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தியது.நாடளுமன்ற கூட்டத் தொடரில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படுமா என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு மத்திய நிதித்துறை இணையமைச்சர் பகவத் கிஷான்ராவ் கரத் மீண்டும்  பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு வாய்ப்பில்லை என பதில் அளித்தார்.இந்நிலையில் சட்டீஸ்கர் மாநில அமைச்சரவை கூட்டத்தில் அரசு ஊழியர்கள் பழைய மற்றும் புதிய ஓய்வூதிய திட்டங்களில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்ய வாய்ப்பு வழங்க முடிவு செய்யப்பட்டு அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு பிறகு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள் நேரடியாக பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் சேர்க்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K