திருப்பத்தூர்: நாட்றம்பள்ளி அருகே திடீரென பள்ளியை மூடுவதாக அறிவிக்கப்பட்டதால் தற்போது பெற்றோர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு இருக்கின்றனர். கூட்டுறவு சர்க்கரை ஆலயத்தின் கீழ் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக திவான் முகமது முன்னணியில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கிட்டத்தட்ட 450 மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில் திடீரென பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளனர். அதாவது இந்த வருடம் வருகின்ற 31-ஆம் தேதி பள்ளி மூடுவதாக அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளதாக அந்த நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் தற்பொழுது பெங்களூர் செல்லக்கூடிய சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் தற்பொழுது அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் காவல்துறையினர் அங்கு வந்து அந்த பெற்றோரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அந்த மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் ஒரு கோரிக்கை தான் வைக்கின்றனர். அந்த கோரிக்கை அரசு அந்த பள்ளியியை எடுத்து நடத்த வேண்டும் என்பதுதான். மேலும் தற்பொழுது அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.