மறைந்த அம்மா எடுத்த திடீர் முடிவு.. போட்டுத்தள்ள ஸ்கெட்ச் போட்ட மோடி! குட்டை போட்டுடைத்த எம்எல்ஏ!

மறைந்த அம்மா எடுத்த திடீர் முடிவு.. போட்டுத்தள்ள ஸ்கெட்ச் போட்ட மோடி! குட்டை போட்டுடைத்த எம்எல்ஏ!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இறப்பு குறித்து பல சந்தேகங்கள் இருந்து வரும் நிலையில் தற்பொழுது அதிமுகவிலிருந்து திமுகவிற்கு தாவிய சட்டமன்ற உறுப்பினர் புதிய சர்ச்சையை கிளப்பும் விதத்தில் பேட்டி ஒன்று அளித்துள்ளார்.

இதில் ஜெயலலிதாவின் மரணம் குறித்து முக்கிய தகவல்களை வெளியிட்டதால் தற்பொழுது அது பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. முன்பே ஏன் ஜெயலலிதா அவர்களின் சிகிச்சை விவரம் குறித்து தெளிவாக விவரிக்கப்படவில்லை?

ஏன் சிசிடிவி காட்சிகள் வெளியிடப்படவில்லை என்று பல கேள்விகள் ஆறுமுகசாமி ஆணையம் அப்போலோ மருத்துவமனை சார்ந்த சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளிடம் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் அதிமுகவிலிருந்து திமுகவிற்கு சென்ற சட்டமன்ற உறுப்பினரான மார்க்கண்டேயன் என்பவர் ஜெயலலிதா மரணம் குறித்து புதிய தகவலை தெரிவித்துள்ளார்.

பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழாவானது அனைத்து மாவட்டங்களிலும் கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில், தூத்துக்குடி மாவட்டத்திலும் விழா நடைபெற்றது.

அந்த விழாவில் கலந்து கொண்ட திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜெயலலிதா இறந்ததற்கு காரணமே மோடி தான் என்று தெரிவித்தார்.

மேலும் அவர் இது குறித்து கூறியதாவது, ஜெயலலிதா அவர்கள் இருந்தவரை அந்த கட்சியில் நான் இருந்தேன். அவர் வரும் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக போட்டியிடுவதாக தெரிவித்ததால், இவரை எதிர்க்க முடியாமல் பிஜேபி திட்டமிட்டு ஜெயலலிதா அவர்களை கொன்று விட்டது என்று கூறினார்.இவ்வாறு அவர் கூறியதையடுத்து பலரும் இதுகுறித்து பரபரப்பாக பேசி வருகின்றனர்.

அதுமட்டுமின்றி தற்பொழுது திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கூறிய அனைத்து திட்டங்களும் படிப்படியாக நிறைவேற்றி வரும் வேளையில் குடும்ப தலைவிகளுக்கான உதவி தொகையும் விரைவில் வழங்கப்படும் என தெரிவித்தார்.

Leave a Comment