தேர்வுகள் இயக்குனரகம் மாணவர்களுக்கு வெளியிட்ட ஹேப்பி நியூஸ்! பொதுத்தேர்விற்கு இவர்கள் கட்டணம் செலுத்த வேண்டாம்!

0
91
Happy news published by Directorate of Examinations for students! They should not pay for public examination!
Happy news published by Directorate of Examinations for students! They should not pay for public examination!

தேர்வுகள் இயக்குனரகம் மாணவர்களுக்கு வெளியிட்ட ஹேப்பி நியூஸ்! பொதுத்தேர்விற்கு இவர்கள் கட்டணம் செலுத்த வேண்டாம்!

கொரோனா பெருந்தொற்று காலங்களில் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. மேலும் பொது தேர்வும் ரத்து செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளிகள் அனைத்தும் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கியது. அந்த வகையில் கடந்த டிசம்பர் மாதம் தான் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் டூ வரை உள்ள மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு நடத்தப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டது.

அரையாண்டு விடுமுறை முடிந்த நிலையில் கடந்த ஜனவரி இரண்டாம் தேதி  பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. அதனையடுத்த  பிளஸ் டூ வகுப்பிற்கு வரும் மார்ச் மாதம் பொது தேர்வு நடக்க உள்ளது. இந்நிலையில்அரசு தேர்வுகள் இயக்குனரக இயக்குனர் சேதுராமன் வர்மா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் எம் பி சி பட்டியல் இன மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் இல்லை.

பெற்றோர் ஆண்டு வருவாய் ரூ 2.5 லட்சத்திற்கும் கீழ் இருக்கும் பிசி மாணவர்களுக்கும் தேர்வு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் அரசு பள்ளிகளில் ஆங்கில வழியில் படிப்பவர்களுக்கு தேர்வு கட்டணம் இருக்கின்றது. சுயநிதி மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்திய பள்ளிகளில் பயின்று வரும் பிளஸ் டூ மாணவர்கள் தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ் டூ வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களிடம் தேர்வு கட்டணத்தை வசூல் செய்து ஜனவரி 20ஆம் தேதிக்குள் ஆன்லைனில் செலுத்த வேண்டும் என அனைத்து பள்ளிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
Parthipan K