கொளுத்தும் கோடை வெயிலில் மக்களை குளிர்விக்க வரும் கோடை மழை!

Photo of author

By Vijay

கொளுத்தும் கோடை வெயிலில் மக்களை குளிர்விக்க வரும் கோடை மழை!

தமிழகத்தில் இப்போதே கோடை வெயில் கொளுத்த தொடங்கி விட்டது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் கொஞ்சம் அதிகமாகவே காணப்படுகிறது. தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கோடை வெயில் சதம் அடித்து வருகிறது.

இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள். நிறைய இடங்களில் அதிக வெப்பம் காரணமாக குழந்தைகளுக்கு அம்மை போன்ற நோய்கள் பரவ தொடங்கியுள்ளன. இந்நிலையில், கோடை வெப்பத்தை தணிக்கும் விதமாக தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் கோடை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதன்படி, அடுத்த 6 நாட்களுக்கு தமிழகத்தில் கோடை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாம். எனவே நாளையும், நாளை மறுதினமும் தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் மேற்கு மலை மாவட்டங்கள் ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், ஏப்ரல் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் தென் தமிழக மாவடங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதனால் மக்கள் கொஞ்சம் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும் இந்த 11 ஆம் தேதி வரை தமிழக உள்மாவட்டங்களின் சமவெளிப்பகுதிகளில் வெப்பநிலை 3-5 டிகிரி செல்சியஸ் கூடுதலாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.