அமராவதி நில ஒதுக்கீடு ஊழல் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்த ஆந்திர உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து!

Photo of author

By Savitha

அமராவதி நில ஒதுக்கீடு ஊழல் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்த ஆந்திர உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து!

அமராவதி நில ஒதுக்கீடு ஊழல் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்த ஆந்திர உயர்நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.

தெலுங்கு தேச கட்சி ஆட்சிக் காலத்தில் அமராவதி நிலம் ஒதுக்கீடு ஊழல் தொடர்பாக அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு ஆந்திர உயர்நீதிமன்றம் கடந்த 2020, செப்டம்பரில் இடைக்கால தடை விதித்தது.

இதற்கு எதிராக ஆந்திர அரசு தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதி எம் ஆர் ஷா, சி.டி. ரவிக்குமார் ஆகியோர் அமர்வு விசாரித்தது.

இந்த மனு மீது இன்று கூறிய தீர்ப்பில், அமராவதி நிலம் ஒதுக்கீடு ஊழல் தொடர்பாக அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு ஆந்திர உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருக்க கூடாது.

எனவே ஆந்திர உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்கிறோம். இந்த மேல்முறையீடு மனு தொடர்பாக உச்சநீதிமன்றம் தெரிவித்த கருத்துக்களை கணக்கில் கொள்ளாமல் ரிட் மனுக்களை மீண்டும் ஆந்திர உயர்நீதிமன்றம் விசாரிக்க வேண்டும்.