தாம்பரம் மாநகராட்சி பகுதியில் நீர்நிலைகளை பாதுகாக்க நடவடிக்கை!

0
107
#image_title

தாம்பரம் மாநகராட்சி பகுதியில் நீர்நிலைகளை பாதுகாக்க நடவடிக்கை!

தாம்பரம் மாநகராட்சி பகுதியில் நீர்நிலைகளை பாதுகாக்க நடவடிக்கை! கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பதிவு பெற்ற கழிவுநீர் லாரிகள் கழிவு நீரை கொட்டி செல்ல உத்தரவு.

பதிவு சான்றிதழ் பெறாத கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் மீது நடவடிக்கை. தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அழகுமீனா அறிவிப்பு.

தாம்பரம் மாநகராட்சி பகுதியில் கழிவுநீர் லாரிகள் நீர் நிலைகளில் கழிநீரை கொட்டி சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தி வந்தது. இதனை தடுத்து நிரந்தர தீர்வு காண தாம்பரம் மாநகராட்சி பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் உள்ள மன்னுரான் குளம் பகுதியில் கழிவுநீர் லாரிகள் கழிவு நீரை கொண்டு வந்து கொட்டி செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாநகராட்சி பகுதியில் 34 லாரிகளுக்கு கழிவு நீரை மாநகராட்சி பகுதியில் அகற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த லாரிகள் மாநராட்சி பகுதிகளில் பல்வேறு இடங்களில் இருந்து கழிவு நீரை லாரிகளில் சேகரித்து கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் கட்டணம் கட்டி கொட்டி செல்கின்றனர்.

உரிய அனுமதி இல்லாமல் செயல்பட்ட எட்டு கழிவுநீர் லாரிகள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க மாநகராட்சி சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மாநகராட்சி வெப்சைட்டில் பட்டியலிடப்பட்ட லாரிகளை தொடர்பு கொண்டு கழிவு நீரை அகற்றிக் கொள்ளலாம்.

அனுமதி இல்லாமல் செயல்படும் கழிவுநீர் லாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாநகராட்சி ஆணையர் அழகுமீனா தெரிவித்துள்ளார்.

author avatar
Savitha