IPL: KKR அணி தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெங்கடேஷ் ஐயரை புதிய கேப்டனாக நியமிக்க உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
நடக்கவிருக்கும் ஐ பி எல் 2025 போட்டிக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் நடைபெற்று வருகிறது. இந்த மெகா ஏலத்தில் நிறைய எதிர்பாராத நிகழ்வுகள் நடைபெற்றது. இதுவரை இல்லாத அளவிற்கு அதிக தொகைக்கு வீரர்கள் வாங்கப்பட்டனர். மேலும் இந்த மெகா ஏலமானது இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது.
மேலும் இந்த மெகா ஏலத்தில் KKR அணி ரிஷப் பண்ட் வாங்குவதில் ஆர்வமாக இருக்கும் என பேசப்பட்ட நிலையில் அதற்கு மாறாக ரிஷப் பண்ட் மற்றும் கே எல் ராகுல், ஸ்ரேயர்ஸ் ஐயர் யாரையும் வாங்காமல், அதே அணியில் விளையாடி வரும் தமிழகத்தை பூர்விகமாக கொண்ட வெங்கடேஷ் ஐயரை ரூ.23.75 கோடிக்கு வாங்கியுள்ளது.
இவர் ஏலத்திற்கு வரும் வரை எந்த வீரருக்கும் ஆர்வம் காட்டாமல் இருந்த KKR அணி அவர் ஏலத்திற்கு வந்த உடன் அவரை வாங்கியே ஆகா வேண்டும் என்பதில் கவனமாக இருந்தது. மேலும் இவர் கடைசி 2 வருடங்களாக நல்ல ஃபார்மில் இருந்து வருகிறார். இவர் சிறந்த பேட்ஸ்மேனாக மட்டுமல்லாமல் பகுதி நேர பவுலராகவும் சிறப்பாக செயல்படுவார்.
இவரை அதிக தொகைக்கு வாங்க காரணம் KKR அணியின் அடுத்த கேப்டன் பொறுப்பிற்காக என கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன. மேலும் இந்த முறை அதிக தொகைக்கு ரிஷப் பண்ட் ரூ.27 கோடிக்கும், ஸ்ரேயர்ஸ் ஐயர் ரூ.26.5 கோடிக்கும், வெங்கடேஷ் ஐயர் ரூ.23.75 கோடிக்கும் வாங்கப்பட்டனர்.