பள்ளி வாளகத்தில் மது விருந்து அளித்த ஆசிரியர்!! வெளியான அதிர்ச்சி வீடியோ!

பள்ளி வாளகத்தில் மது விருந்து அளித்த ஆசிரியர்!! வெளியான அதிர்ச்சி வீடியோ!

மத்தியபிரேதேச மாநிலம் சிவபுரி மாவட்டம் போடா கிராமத்தில்  அரசு தொடக்க பள்ளி ஒன்று  நீண்ட காலமாக செயல் பட்டு வருகிறது. அந்த பள்ளியில் சுற்று வட்டார கிராம பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இன்னிலையில்  அப்பள்ளியில் பணி புரியும் ஆசிரியர் ஒருவரின் செயல் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அந்த ஆசிரியர் தன் நண்பர்கள் மற்றும் பலருக்கு பள்ளி வளாகத்தில் மது மற்றும் அசைவ உணவு வகைகளை அளித்து பெரிய விருந்தே நடத்தியுள்ளார். அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மக்கள் சிலர், காவல் துறையில் புகார் அளிப்பதற்காக அவர் விருந்து கொடுத்த செயலை வீடியோ எடுத்துள்ளனர்.  அவ்வாறு கிராம மக்கள் வீடியோ எடுப்பதை பார்த்த ஆசிரியர் மற்றும் அவரது  நண்பர்கள் வீடியோ எடுத்தவரை அடித்து உதைத்து துன்புறுத்தியுள்ளனர்.

இதனை அறிந்த மாவட்ட கல்வி அதிகாரி அவரை உடனடியாக பணிஇடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும் விசாரணைக்கு பிறகு ஆசிரியரின் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.இந்நிலையில் , அவர்கள் பள்ளி வளாகத்தில் மது அருந்திய காட்சி கோப்புகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகின்றது.

Leave a Comment