Breaking News, District News

ஏற்காட்டில்  நண்பர்களுடன் சென்ற வாலிபர் திடீர் மரணம்.!! காரணம் என்ன?..

Photo of author

By Parthipan K

ஏற்காட்டில்  நண்பர்களுடன் சென்ற வாலிபர் திடீர் மரணம்.!! காரணம் என்ன?..

Parthipan K

Button

ஏற்காட்டில்  நண்பர்களுடன் சென்ற வாலிபர் திடீர் மரணம்.!! காரணம் என்ன?..

ஏற்காட்டில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் நல்லூர் வீழ்ச்சி ஒன்றுள்ளது. கடந்த சில நாட்களாக தொடர் கனமழையினால் ஏற்காட்டில் அனைத்து பகுதிகளிலும் ஆங்காங்கே தற்காலிக நீர்வீழ்ச்சி உருவாகி தண்ணீர் வழிந்தோடுகிறது.இதைக்காண ஆர்வமுடன் ஏராளமான பயணிகள் அந்த நீர்வீழ்ச்சிகளில் குளித்து வருகின்றன.

இந்நிலையில் புதுச்சேரியைச் சேர்ந்த அருள்ஜோதி மகன் அருண்குமார்.அவருடைய  வயது 29.இவர்  நண்பர்களுடன் சுற்றுலா செல்வதற்காக ஏற்காட்டிற்கு வந்துள்ளார். மிக சந்தோசமாக நீர்வீழ்ச்சியில் விளையாடிக் கொண்டிருந்தார். மேலும் சில நண்பர்கள் அவனுடன் வந்தனர்.எல்லோரும் சேர்ந்து  சுற்றுலா வந்தவர்கள் நல்லூர் நீர்வீழ்ச்சிக்கு எல்லோரும் சேர்ந்து குளிக்கச் சென்றனர். அங்கு பாசம் பிடித்த பாறைகள் அதிகம் இருந்ததாக கூறப்படுகிறது.

அருண்குமார் என்பவர் திடீரென்று கால் தவறி வலிக்கி விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அருண்குமாரை நண்பர்கள் அனைவரும் 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து ஏற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு அருண்குமாருக்கு முதலுதவி  சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் அருண்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஏற்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அருண்குமார் உயிரிழந்த சம்பவம் பெற்றோர்களுக்கு இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாமரைக்குளம் பேரூராட்சி அலுவலக கூட்டரங்கில் மாதாந்திர கூட்டம்! தலைவர் பால்பாண்டி தலைமையில் நடைபெற்றது!

தேனி திமுகவில் தலைவிரித்தாடும் உட்கட்சி பூசல்! சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!

Leave a Comment