அதிமுகவிற்கு எல்லாமே சோதனை காலம் தான்! முன்னாள் அமைச்சர் அதிரடி பேட்டி!

Photo of author

By Sakthi

விருதுநகர் மேற்கு மாவட்டத்தின் அண்ணா தொழிற்சங்கம் போக்குவரத்து பிரிவிற்கு ராஜபாளையத்தில் இரண்டு பணிமனை, ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், உள்ளிட்ட 5 பணிமனை புதிய நிர்வாகிகள் நியமனம் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி விருதுநகரில் நேற்று நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் கே டி ஆர் பங்கேற்றுக்கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு நியமன சான்றிதழ்களை வழங்கி இருக்கிறார்.

அப்போது முன்னாள் அமைச்சர் கே டி ஆர் தெரிவித்ததாவது, அதிமுகவிற்கு எப்போதும் எல்லாமே சோதனைதான் எப்போதெல்லாம் சோதனை வருகிறதோ அப்போதெல்லாம் இருந்தவர்கள் தான் தற்போதும் இருக்கிறார்கள். திடீரென்று வந்தவர்கள் திடீரென்று போய்விட்டார்கள் அதிமுக என்றுமே சாகாவரம் பெற்ற இயக்கம் என தெரிவித்திருக்கிறார்.

கழகத்திற்கு கடந்த 1996ஆம் ஆண்டு ஏற்படாத சோதனையும் வேதனையுமா தற்போது ஏற்பட்டு இருக்கிறது? அந்த சமயத்தில் கூட திருத்தங்கல் நகராட்சியில் நான் துணைத் தலைவராக வெற்றியடைந்தேன் சோதனை என்பது அதிமுகவிற்கு புதிதல்ல சோதனைகள் வரும் போதெல்லாம் எரிகின்ற பந்து எப்படி துள்ளி எழுந்து வருமோ அதேபோல அதிமுக மீண்டும் எழும் என்று தெரிவித்திருக்கிறார்.

அதோடு அதிமுக ஆட்சிக்காலத்தில் திமுகவை மிகவும் கொச்சையாக விமர்சனம் செய்தவர் முன்னாள் அமைச்சர் கே டி ஆர் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்களை மிகவும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். ஆகவே திமுக ஆட்சி அமைந்தவுடன் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மிகப்பெரிய நெருக்கடி இருக்கிறது என்று தமிழகம் முழுவதும் பேச்சுக்கள் எழுந்தனர்.

ஆனால் இவர் வெள்ளை மனசுக்காரர் மனதில் பட்டதை பேசுகிறார் என்பது உள்ளிட்ட இவருக்கு சாதகமான ஒரு சில வார்த்தைகளும் தமிழகம் தழுவிய அளவில் சமூகவலைதளங்களில் உலாவிக் கொண்டிருந்தனர்.

எதிர்க்கட்சியாக இருந்தபோது திமுக இவரை கடுமையாக விமர்சனம் செய்த நிலையில், தற்போது திமுக ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு முன்னாள் அமைச்சர்கள் பலரையும் நோண்டி நுங்கு எடுத்து கொண்டு இருக்கிறது. ஆனால் திமுக அரசு கே டி ஆர் பக்கம் மட்டும் இதுவரையில் பார்வையை திருப்பவில்லை என்று சொல்கிறார்கள். ஆகவே இவர் சொல்லிக் கொள்ளும்படியாக முறைகேடுகள் எதிலும் ஈடுபடவில்லையா அல்லது இவர் மீது நடவடிக்கை எடுக்க திமுக அரசுக்கு பயமா என்று ஒரு சிலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.