அம்மனை கூட விட்டு வைக்காத திருடன்!.. அம்பாளுக்கு சூட்டிய பொட்டுத் தாலியை திருடியவர் கைது!..
தஞ்சையை அடுத்த வல்லம் திருச்சி சாலையில் ஆலமரம் அருகே பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரன் அம்மன் திருக்கோவில் உள்ளது. கோவிலில் ஆடி மாதம் கடைசி வாரம் என்பதால் அம்மனை காண பக்தர்கள் வந்திருந்தார்கள்.
அப்போது அந்த கோவிலில் பக்தர்கள் அனைவரும் அம்மனை தரிசனம் செய்து கொண்டிருந்தார்கள்.அங்கு வந்த ஒரு வாலிபர் அம்மனை தரிசிப்பதாக கூறி உள்ளே சென்றார். அம்மனை தழுவி காலில் விழுந்து தரிசித்து இருந்தார்.
கண்ணிமைக்கும் நொடியில் அம்மன் அணிந்திருந்த பொட்டு தாலியை அறுத்துக் கொண்டு வேகமாக ஓடியுள்ளார். இதைக் கண்ட அக்கோவிலில் உள்ள பக்தர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்து அந்த வாலிபரை துரத்தி சென்றனர். ஆனால் அந்த வாலிபர் தப்பி ஓடிவிட்டார்.பிறகு இது குறித்து வல்லம் போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.அப்போது வல்லம் ஏகவுரி அம்மன் கோவில் அருகே நின்றா வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் அவர் கரூரைச் சேர்ந்த செல்லதுரை என்பதும் அவர்தான் அம்மன் கழுத்தில் இருந்த பொட்டு தாலியை பறித்து சென்று ஓடியதும் தெரிய வந்தது. இதன் பேரில் போலீசார் செல்லத்துரை கைது செய்தனர்.அம்மனின் தாலியை திருடிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.