மதுரை மாவட்டத்தில் ஆட்டு மந்தையிலிருந்து கடத்தப்பட்ட 6 ஆடுகளை உரிமையாளர்களிடமே திருடிய ஆட்டை விற்ற திருடன், கையும் களவுமாக சிக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் நாகமலை அருகே உள்ள கீழமாத்தூர் பகுதியை சேர்ந்த கண்ணப்பன் என்பவருக்கு சொந்தமாக ஒரு ஆட்டு மந்தையிலிருந்து கடந்த சில நாட்களாக ஆறு ஆடுகள் திருடு போகின்றன .மேலும், இது தொடர்பாக அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் கருப்பன் சகோதரின் நண்பன் பாலமுருகன் என்பவர் ஒருவர் , ஆடுகளை விற்க வந்துள்ளார். ஆடுகளை அடிமட்ட விலைக்கு தர பாலமுருகன் ஒப்புக் கொண்டதனால், சந்தேகமடைந்த கருப்பனின் சகோதரர் இது குறித்து காவல் நிலையத்தில் தகவல் கொடுத்துள்ளார்.
இது குறித்த பாலமுருகனை காவல்துறையினர் விசாரித்தபோது, ஆடு திருடியதை ஒப்புக்கொண்டார். இதற்காக ஒரு டெம்போவை வைத்து பாலமுருகன் ஆடுகளை திருடி அடிமட்ட விலைக்கு விற்று வந்தது தெரியவந்தது.
ஆறு ஆடுகளை திருடி, அதன் உரிமையாளரிடமே விற்க முயன்ற சம்பவம், அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.