மாணவிகளை தனித்தனியாக அழைத்து ஆசிரியர் செய்த காரியம்! 16 ஆண்டுகளாக நடக்கும் அவலம் நிலை!  

Photo of author

By Rupa

மாணவிகளை தனித்தனியாக அழைத்து ஆசிரியர் செய்த காரியம்! 16 ஆண்டுகளாக நடக்கும் அவலம் நிலை!

சமீப காலமாக பள்ளிகளில் தொடர்ந்து மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்து வருகின்றனர் என புகார்கள் எழுந்த வண்ணமாகதான் உள்ளது.அந்தவகையில் தற்போது கும்பகோணத்தில் உள்ள ஓர் பள்ளியில் அதுபோல் ஓர் சம்பவம் அரங்கேரியுள்ளது.கும்பகோணத்தில் அரசு உதவி பெரும் பள்ளி ஒன்றில் பணி புரிபவர் தான் சேகர்.இவர் ஆரம்பகட்டக்காலத்தில் இருந்தே இப்பள்ளியில் தான் பணி புரிந்து வருகிறார்.இவர் மீது வெகு நாட்களாக மாணவர்கள் பாலியல் தொல்லை கொடுக்கிறார் என்ற புகாரை முன் வைத்து வருகின்றனர்.

இது வெளியே தெரிய வந்தால் பள்ளியின் பெயர் கெட்டு விடும் என்று எண்ணி,அந்த ஆசிரியர் மீது ஒவ்வொரு முறை புகார் வரும்போதும் பள்ளி நிர்வாகம் அவரை கண்டித்து அனுப்புகின்றனர்.அவ்வாறு கண்டித்து அனுப்பும் போது அவர் சிறிது நாட்கள் மட்டும் அமைதியாக இருந்து கொண்டு மீண்டும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்க ஆரம்பித்துவிடுகிறார்.இவ்வாறு தொடர்ந்து நடந்து வந்துள்ளது.அதனையடுத்து தற்போது கொரோனா பெருந்தொற்று அனைத்தும் முடிந்து 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வருகை புரிகின்றனர்.

அந்தவகையில் தற்போது மாணவிகள் பள்ளிக்கு வரும்போது அவர்களிடம் சேகர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.மேலும் ஒவ்வொரு மாணவிகளை தனியாக அழைத்து தொல்லை கொடுத்ததால் மாணவிகள் அனைவரும் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளனர்.மொத்தம் 23 மாணவிகள் சேகர் என்ற ஆசிரியர் மீது புகார் அளித்துள்ளனர்.அதனையடுத்து மாணவியின் பெற்றோர்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் ஆகியோர் பள்ளிசெயலாளரிடம் புகார் அளித்தனர்.இதனிடையே அந்த பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கூறுவது,என் மீது ஏதேனும் நடவடிக்கை எடுத்தால் அதிக பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்.

நான் மிகவும் செல்வாக்கு உள்ளவன்,அதுமட்டுமின்றி என்பின்னால் என் சமூகத்தினர் உள்ளனர் என்றெல்லாம் மிரட்டியுள்ளார்.அதனையெல்லாம் சிறிதும் கண்டுகொள்ளாமல் பள்ளி நிர்வாகம் தஞ்சாவூர் மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர்.இவற்றில் மாணவிகளும் சேர்ந்து புகார் அளித்தனர்.அதனையடுத்து அந்த ஆசிரியர் சேகர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.அதனையடுத்து மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வந்தது.இந்த ஆசிரியர் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

அதுமட்டுமின்றி ஒவ்வொரு வகுப்பறையிலும் தினந்தோறும் ஏதேனும் ஓர் மாணவியை ஏதேனும் ஓர் காரணம் சொல்லி வீட்டுக்கு செல்ல விடாமல் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.மாணவிகளோ அல்லது பள்ளி நிர்வாகமோ ஏதேனும் புகார் அளிக்க நினைத்தால் அனைவரையும் மிரட்டி வந்துள்ளார்.அதுமட்டுமின்றி இந்த சேகரை எதிர்த்து 2006 ஆம் ஆண்டு பள்ளியில் போராட்டம் நடைபெற்றது.ஏனென்றால் பள்ளி கல்வித்துறையிடம் இவர் செய்யும் செயல்களை முறையிட்டும் கண்டுகொள்ளாததால் ஆரப்பாட்டம் நடைபெற்றது.பள்ளி கல்வித்துறையிடம் முறையிட்டு கண்டு கொள்ளாததற்கு பின்னணி காரணம் என்ன என்பது குறித்து விசாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.