நாளை வெளியாகிறது!! தனுஷ் நடிக்கும் D44 படத்தின் டைட்டில் லுக்!!

Photo of author

By Jayachithra

நடிகர் தனுஷின் D44 படத்தின் டைட்டில் நாளை வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் தனுஷ் தற்போது இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாறன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அதனைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் அடுத்ததாக குட்டி, உத்தமபுத்திரன், யாரடி நீ மோகினி ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. மேலும், இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்தப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நித்யா மேனன், பிரிய பவனி சங்கர், ராசி கண்ணா என மூன்று நடிகைகள் நடிக்க உள்ளனர். மேலும் இந்த படத்தில் இயக்குனர் பாரதிராஜா மற்றும் நடிகர் பிரகாஷ்ராஜ் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்தை தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் முதலில் இந்தப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளை அடுத்த அடுத்த அப்டேடாக வெளியிட்டு வந்த நிலையில் நாளை மாலை 6 மணிக்கு இந்த படத்தின் டைட்டில் வெளியாகவுள்ளதாக அறிவித்துள்ளது. இதனால் தனுஷ் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.