மனைவி கொடுத்த டார்ச்சர்!..பொறுக்க முடியாத கணவனின் கொலைவெறி!..

0
215
The torture given by the wife!..The killing spree of the unbearable husband!..
The torture given by the wife!..The killing spree of the unbearable husband!..

மனைவி கொடுத்த டார்ச்சர்!..பொறுக்க முடியாத கணவனின் கொலைவெறி!..

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகேவுள்ள காட்டூர் பழமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்மணி. இவருடைய மனைவி ஜோதிமணி இவர்கள் இருவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.திருமணமாகி ஒரு வருடத்தில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

இதற்கிடையில் தமிழ்மணி விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கு ஒன்றை தொடுத்தார்.ஆனால் ஜோதிமணி விவகாரத்து வழங்காமல் தன்னுடன் சேர்ந்து வாழுமாறு  பதில் மனு அளித்தார். இதைத்தொடர்ந்து நீதிபதி இரு தரப்பையும் விசாரித்து தமிழ்மணி சொத்தின் ஒரு பகுதியை ஜோதிமணிக்கு கொடுக்குமாறு உத்தரவிட்டார்.

இதனால் அங்கு வசித்து வந்த ஜோதிமணியோ அவ்வப்போது கணவரிடம் சென்று தன்னுடன் சேர்ந்து வாழுமாறு கேட்டுக் வந்துள்ளார். ஆனால் ஜோதிமணியோ தன்னுடன் சேர்ந்து வாழப் போவதில்லை என கூறியிருந்தார். பிடிவாதமாக தன்னுடன் சேர்ந்து வாழும் வரை ஜோதிமதி கேட்டார். இந்நிலையில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

இந்த தகராறில் தமிழ்மணி ஜோதிமணியை கீழே தள்ளிவிட்டார். இதனால் ஜோதிமணி கீழே  விழுந்து சம்பவ இடத்திலேயே உயிர்துறந்தார். இதுகுறித்து சிவகிரி போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து தமிழ்மணி  அவருடைய தாய் மற்றும் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த குலவிளக்கு கிராமத்தைச் சேர்ந்த லோகநாதன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை ஈரோடு மகிலா கோர்ட்டில் நடைபெற்று வந்திருந்தது. அவர் தன் தீர்ப்பில் மனைவியை கொலை செய்ததற்காக அவருக்கு ஆயுள் தண்டனையும் சுமார் ஒரு லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அபராத தொகையை ஜோதிமணி தந்தையிடம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

மேலும் இதற்கு உடந்தையாக இருந்த பழனியம்மாள் லோகநாதன் ஆகியோர் விடுவிக்கப்பட்டார். தன்னுடன் சேர்ந்து வாழுமாறு அழைத்த மனைவியை கொலை செய்த கணவன்.இதனால்  அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டு வந்தது.

Previous articleஇலவச கண் சிகிச்சை முகாம்! முதன்மை மாவட்ட நீதிபதி தொடக்கம்!
Next articleமருத்துவ படிப்பு படிக்கும் மாணவர்களின் கவனத்திற்கு! இதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள்!