தொட்டால் சிணுங்கும் “TOUCH ME NOT” பிளான்ட் இத்தனை நோய்களுக்கு மருந்தாகிறதா?

Photo of author

By Gayathri

நம் கை விரல் பட்டாலே சுருங்கும் தாவரம் தான் தொட்டா சிணுங்கி.இது ஈரப்பதம் நிறைந்த இடங்களில் அதிகம் காணப்படும்.தரையில் படர்ந்து வளரும் இந்த செடி பல நோய்களுக்கு மெடிசனாக பயன்படுகிறது.

தொட்டால் சிணுங்கி இலையை அரைத்து தயிரில் கலந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரக எரிச்சல் குணமாகும்.சிறுநீரகத்தில் கல் இருப்பவர்கள் தொட்டால் சிணுங்கி இலையை ஒரு அளவு நீரில் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி பருகலாம்.

தொட்டால் சிணுங்கி வேரை அரைத்து சாறு எடுத்து ஒரு கப் நீரில் கொதிக்க வைத்து குடித்து வந்தால் சிறுநீர் வெளியேறும்.

தொட்டால் சிணுங்கி இலை மற்றும் வேரை சம அளவு எடுத்து வெயிலில் உலர்த்தி பொடியாக்கி கொள்ளவும்.பிறகு ஒரு கிளாஸ் பசும் பாலில் இந்த பொடி ஒரு ஸ்பூன் அளவு கலந்து பருகினால் மூலச்சூடு நீங்கும்.

தொட்டால் சிணுங்கி இலையை அரைத்து மோரில் கலந்து பருகி வந்தால் வயிற்றுக்கடுப்பு மற்றும் வயிற்றுப்புண் குணமாகும்.குழிப்புண் பாதிப்பு இருப்பவர்கள் தொட்டால் சிணுங்கியை அரைத்து சாறு எடுத்து புண்ணில் வைத்தால் அவை விரைவில் குணமாகிவிடும்.

தொட்டால் சிணுங்கி இலையை அரைத்து சாறு எடுத்து வைத்துக் கொள்ளவும்.பிறகு இரண்டு சின்ன வெங்காயத்தை தோல் நீக்கிவிட்டு இடித்து சாறு எடுத்துக் தொட்டால் சிணுங்கி சாறில் சேர்த்துக் கொள்ளவும்.அடுத்து அதில் சிறிது சீரகம் சேர்த்து கலக்கி சாப்பிட்டால் மாதவிடாய் காலங்களில் அதிக இரத்தப்போக்கு ஏற்படுவது சரியாகும்.