குறும்படம் எடுத்ததால் நடந்த விபரீதம்! காதல் மனைவி செய்த செயல்!
சென்னையில், பெரம்பூர் மாவட்டத்தில், நீளம் தோட்டம் தெருவைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் 21 வயதான இவர், கீர்த்தனா என்ற 21 வயது பெண்ணை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார். கீர்த்தனா ஒரு சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து வருகிறார்.
கடந்த சில நாட்களாக ராமச்சந்திரன் குறும்படம் எடுப்பதில்ல் மிகுந்த ஆர்வம் காட்டி வந்துள்ளார். மேலும் அதை சமூக வலைதளங்களிலும் பதிவிட்டு வந்துள்ளார். இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதன் காரணமாக கீர்த்தனா மன உளைச்சலில் இருந்துள்ளார். வாழ்க்கையில் வெறுப்படைந்த கீர்த்தனா மரச்சாமான்கள் கெட்டுப்போகாமல் இருக்க பயன்படுத்தும் செல் ஆயிலை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அப்போது மயக்க நிலையில் இருந்த கீர்த்தனாவை மீட்டு ராமச்சந்திரன் அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்த போது, சிகிச்சை பெற்று வந்த கீர்த்தனா. தற்போது சிகிச்சை பலனின்றி 17.07.21 அன்று மதியம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இது குறித்து திரு.வி.க நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தும் வருகின்றனர். மேலும் கீர்த்தனாவுக்கும், ராமச்சந்திரனும் திருமணமாகி ஆறு மாதங்களே ஆவதால் ஆர்டிஓ விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கணவரின் செயல்பாடுகளால் வெறுத்துப் போன இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அப்பகுதி மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய காலகட்டத்தில், கல்யாணம் செய்வதே பெரிய விசயமாக இருக்கிறது. அதிலும் காதல் திருமணம் என்றால் நினைத்து பாருங்கள் எவ்வளவு கஷ்டம் என்று, ஆனால் அதன் அருமை தெரியாமல் மனைவியை கவனிக்காமல் விட்டு விட்டாரோ என்ற சந்தேகம் பலருக்கு எழுந்த வண்ணம் உள்ளது.

