நினைத்ததை முடிக்கும் பரிகாரம்!

0
82

ஆன்மீக ரீதியாக எந்த ஒரு செயலை செய்யும்போதும் நாம் கண்டிப்பாக வெற்றி அடைவோம் என்ற நம்பிக்கை இருந்தால் அந்த செயல் நன்றாகவே இருக்கும். அதைப் போன்றதுதான் நம்முடைய ஆன்மீகத்தில் பின்பற்றும் ஒரு சில பழக்கவழக்கங்கள். அதோடு சாதாரணமாக பார்த்தால் இவை சாதாரணமாகவே தெரியும். ஆனால் ஆழ்ந்து சிந்தித்தால் அதன் உண்மை என்ன என்பதை நாம் புரிந்துகொள்ள இயலும்.

மளிகை பொருட்களை மற்ற தினங்களில் வாங்கிவிட்டு உப்பை மட்டும் வெள்ளிக்கிழமைகளில் வாங்கினால் வீட்டில் செல்வம் எப்போதும் சேர்ந்து கொண்டே இருக்கும் என்று சொல்லப்படுகிறது அஷ்டமி ,நவமி போன்ற தினங்களில் வெளியே செல்ல நேர்ந்தால் துளசி செடியை வலமாக மூன்று முறை வலம் வந்து வணங்கி சென்றால் நினைத்த காரியம் முடியும் என்று சொல்லப்படுகிறது.

செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பவுர்ணமி தினங்களில் வீட்டில் குத்துவிளக்கு ஏற்றி வழிபாடு செய்வது அனைத்து விதமான சந்தோஷத்தையும் தரும். வெந்தயம், கரும்பு, உள்ளிட்டவற்றை இடித்து அதை ஒரு வெள்ளை துணியில் கட்டி வீட்டின் தென்மேற்கு மூலையில் வைத்து இருந்தால் வரவேண்டிய பணம் விரைவில் வந்து சேரும். 48 தினங்களுக்கு ஒரு முறை வெள்ளைத்துணியில் இருக்கும் அந்த தானியங்களை பிரித்து மாற்றிக் கொள்ளலாம்.

வீட்டிற்கு வருகை தருபவர்களுக்கு குங்குமம் கொடுப்பது பழங்கால தமிழர்களின் மரபு .அவர்கள் வீட்டிற்கு வந்தவுடன் கொடுக்கவேண்டும் வருகை தந்தவர்கள் வெளியே செல்லும் சமயத்தில் கொடுத்தால் நம்முடைய வீட்டில் உள்ள சக்தி அவர்களுடன் சென்று விடும் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது.