சேலம் அருகே நடந்த விபத்தின் கொடூரம்! சிகிச்சை பலனின்றி மரணம்!

0
183
The tragedy of the accident near Salem! Death without treatment!
The tragedy of the accident near Salem! Death without treatment!

சேலம் அருகே நடந்த விபத்தின் கொடூரம்! சிகிச்சை பலனின்றி மரணம்!

சேலம் அருகே கடந்த 25ஆம் தேதி ஒரு கோர விபத்து நடந்தது. அந்த விபத்தில் சாலையில் ஓரமாக சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தின் மீது எங்கிருந்தோ வேகமாக வந்த கார் மோதி, அதன் காரணமாக இரு சக்கர வாகனம் நிலைதடுமாறி, சாலை தடுப்பின் மீது  சாலை தடுப்பில் மோதி தூக்கி வீசப்பட்டது. அதில் இருவர் பயணம் செய்தனர். அவர்கள் வாழப்பாடியை சேர்ந்த அஜித்குமார் மற்றும் அருண் குமார் ஆகும்.

இவர்கள் இருவரும் மகுடஞ்சாவடி அருகே வரும்போது  இந்த விபத்து நடந்தது. விபத்தில் பலத்த காயம் அடைந்த இருவரையும் அருகில் இருப்பவர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் விபத்து குறித்தும் போலீசாரிடம் தெரிவிக்கப்பட்டது. அங்கே இருந்த சிசிடிவி வீடியோவை வைத்து காரின் உரிமையாளர் மற்றும் முகவரியை தனிப்படை அமைத்து போலீசார் குற்றவாளிகளை அதிரடியாக கண்டுபிடித்தனர். அந்த விபத்து வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

காரை வேகமாக ஓட்டிச் சென்று விபத்து ஏற்படுத்திய நபர்கள் 4 பேரும் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ்குமார், வினோத், கௌதம்ராஜ் மற்றும் அருண்குமார் ஆகும். போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது, அவர்கள் அனைவரும்  குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் என்றும் அந்த பழக்கத்தை மறப்பதற்காக சங்ககிரி அருகே உள்ள பூமணி கோவிலுக்கு சென்று பூஜை செய்து, கயிறு கட்டிக்கொண்டு திரும்புகின்றனர் என்றும் தெரியவந்தது.

ஆனாலும் கூட, அப்போதும் குடிபோதையில் தான்  அவர்கள் இருந்துள்ளனர். குடிபோதையின் காரணமாக அதிவேகமாக காரை ஓட்டி அதன் விளைவுதான் இப்படி விபத்தை ஏற்படுத்தியது என்றும் விசாரணையில் தெரியவந்தது. அவர்கள் மீது மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அஜித் குமார் இன்று உயிரிழந்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleதேர்வில்லா வங்கி வேலை !! மாதம் ரூ 1,25,000 ஊதியம்!! விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!!
Next articleமேலும் இரண்டு வீரர்களுக்கு உறுதியான நோய் தொற்று! பேரதிர்ச்சியில் இந்திய அணி!