கோழி சண்டையால் கொலை நடந்த விபரீதம்?

Photo of author

By CineDesk

சென்னையை அடுத்த திருமுல்லைவாயல் ஆரிக்கம்பேடு அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த கார் டிரைவர் சசிகுமார் வீட்டில் அவரது மகனின் ஆசைக்காக 3 கோழிகளை வாங்கி வளர்த்து வந்துள்ளார்.சசிகுமார் வீட்டினர், அடைக்கப்பட்டிருந்த கோழியை திறந்து விட்டுள்ளனர். கோழியானது பக்கத்தில் இருந்த காலி நிலத்தில் மேய்ந்தது. பின்பு எதர்ச்சியாக அருகிலுள்ள அன்பழகனின் வீட்டிற்குள் செல்லவே அதனைக் கண்ட அன்பழகனின் மனைவி அந்தக் கோழியை கல்லால் அடித்து விரட்டி உள்ளார்.

இதனைக்கண்ட சசிகுமாரின் மனைவி கோழியை கல்லால் அடித்து விரட்டியதற்காக கேட்டகப் போய் இருவருக்கும் வாய்ச்சண்டையாக மாறியது.இதனையடுத்து சசிகுமாருக்கும் அன்பழகனிற்கும் இடையே வாக்குவாதம் தொடர்ந்தது.வாக்குவாதத்தில் இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டு அன்பழகன் சசிகுமாரை கீழே தள்ளியுள்ளார்.கீழே விழுந்த சசிகுமாருக்கு தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.இதுகுறித்து தகவலறிந்த ஆவடி டேங்க் பேக்டரி காவல்துறையினர், சசிகுமாரின் சடலத்தைக் கைப்பற்றி சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சசிகுமாரை கொலை செய்த வழக்கில் அன்பழகனை காவல்துறையினர் கைது செய்தனர்.போலி சண்டையை நேரில் உயிரே போகும் சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.