பெட்ரோலே மதுவாக மாறிய விபரீதம்! உச்சகட்ட போதையில் உயிரை இழந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்!
தற்பொழுது காலகட்டத்தில் ஆண்கள் அதிகப்படியான மதுவுக்கு அடிமையாகி வருகின்றனர். அதனின் பின்விளைவுகளை சிறிதும் கண்டு கொள்ளாமல் மதுவுக்கு அடிமையாகி தங்களது வாழ்க்கையை தொலைத்து வருகின்றனர். தொடர்ந்து மதுவுக்கு அடிமையாகி குடித்து வருவதால் நாளடைவில் உடல் அரிப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். பலர் சிகிச்சை பலனின்றி உயிரை இழக்கும் அபாயமும் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி இவருக்கு பின்னணியில் இருக்கும் குடும்பங்களின் நிலை கேள்விக்குறியாக மாறி விடுகிறது.
அந்த வகையில் தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் அரியலூர் கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு என்கிற சேதுராமன். இவர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்தார். இவர் மக்களின் தேவைகளை உடனுக்குடன் செய்து கொடுத்து அந்த ஊராட்சியில் நற்பெயர் எடுத்துள்ளார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. அவ்வாறு மது குடிப்பதற்காக அதனை வாங்க மதுக் கடைக்கு சென்றுள்ளார். அவ்வாறு செல்லும் வழியில் பெட்ரோல் பங்கில் தான் வைத்திருந்த பாட்டிலில் பெட்ரோல் வாங்கியுள்ளார்.
அந்த பெட்ரோலையும் எடுத்துக் கொண்டு மது வாங்க சென்றுள்ளார். அவ்வாறு மதுவை வாங்கிவிட்டு ஒரு இடத்தில் அமர்ந்து குடித்துள்ளார். உச்சகட்ட போதையில் மது தீர்ந்தது கூட தெரியாமல் அவர் மது உடன் வைத்திருந்த பெட்ரோல் பாட்டிலை எடுத்து குடித்துள்ளார். அவரு குடித்ததில் அவர் சில மணி நேரத்திலேயே மயக்கமடைந்துள்ளார் அவ்வழியே சென்ற பொதுமக்கள் அவரை மீட்டு விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். பின்பு அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக முன்னால் ஊராட்சி மன்ற தலைவர் சேதுராமன் உயிரிழந்தார். பின்பு இதுகுறித்து விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்பு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இவ்வழக்கை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரை மதுவின் உச்சகட்ட போதையில் மதுவுக்கு பதில் பெட்ரோலை கொடுத்த இந்த சம்பவம் அப்பகுதி இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.