திடீர் தடம்புரண்ட ரயில்பெட்டி.. அதிர்ஷ்டவசமாக காயத்துடன் உயிர் தப்பிய பயணிகள்!… 

Photo of author

By Parthipan K

திடீர் தடம்புரண்ட ரயில்பெட்டி.. அதிர்ஷ்டவசமாக காயத்துடன் உயிர் தப்பிய பயணிகள்!…

சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரிலிருந்து பயணிகள் அனைவரும் நேற்று ராஜஸ்தான் மாநிலம் ஜோதாப்பூர் நோக்கி ரயிலில் புறப்பட்டனர். அந்த ரயில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் மராட்டிய மாநிலம் கொண்டியா என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தது.

அந்த ரயிலில் முதியோர் ,சிறியவர்,பணிக்கு செல்லும் பணியாளர்கள்,குழந்தைகள்,ஊனமுற்றோர் ஆகியோர் இந்த ரயிலில் பயணம் செய்திருந்தார்கள்.வழக்கம்போல் சென்று கொண்டிருந்த  ரயில் திடிரென்று அதே தண்டவாளத்தில் வந்த சரக்கு ரயில் மீது மோதியது.

இந்த விபத்தில்  ரயிலில் உள்ள 3 பெட்டிகள் தண்டவாளத்திலிருந்து  தடம்புரண்டது.இந்நிலையில் விபத்தில் சிக்கி 50க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த ரயில்வே போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் விபத்து நடந்த பகுதிக்கு விரைந்து சென்று படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என போலீசார்கள் தெரிவித்தனர்.மேலும் சிக்னல் கோளாறு காரணமாக இந்த விபத்து நடந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.