கேரளா: திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பிரசாந்த் அவர்கள் நேற்று செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியது பின்வருமாறு:
- சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடப்பு 2024-2025 மண்டல, மகரவிளக்கு சீசனை முன்னிட்டு கடந்த நவம்பர் மாதம் 15-ந் தேதி கோவில் நடை திறக்கப்பட்டது.
- மறுநாள் முதல் (கார்த்திகை-1) வழக்கமான பூஜை நடந்து வந்தது.
- 41 நாட்கள் நடைபெற்று வந்த பூஜையின் சிகரமாக கடந்த 26-ந் தேதி மண்டல பூஜையுடன் நிறைவு பெற்றது.
- இதனை தொடர்ந்து 3 நாட்களுக்கு பிறகு மகரவிளக்கு பூஜைக்காக 30-ந் தேதி மாலையில் திறக்கப்பட்டது. 31-ந் தேதி முதல் வழக்கமான பூஜை நடந்து வருகிறது.
- நடந்து முடிந்த மண்டல சீசனில் மொத்தம் 32 லட்சத்து 49 ஆயிரத்து 756 பக்தர்கள் சாமி தரிசனம் செய்திருந்தனர்.
- மண்டல சீசனில் 41 நாட்களில் மொத்த வருமானம் ரூ.297 கோடியே 6 லட்சத்து 67 ஆயிரத்து 679 ஆகும்.
- கடந்த ஆண்டை விட கூடுதலாக 4 லட்சத்து 7 ஆயிரத்து 309 பக்தர்கள் சாமி தரிசனம் செய்திருந்த நிலையில், மண்டல சீசனில் கடந்த ஆண்டை விட ரூ.82 கோடியே 23 லட்சத்து 79 ஆயிரத்து 781 கூடுதல் வருமானம் கிடைத்துள்ளது.
- இதில் அரவணை விற்பனை மூலம் ரூ.124 கோடியே 2 லட்சத்து 30 ஆயிரத்து 950-ம், காணிக்கை மூலம் ரூ.80 கோடியே 25 லட்சத்து 74 ஆயிரத்து 567-ம் கிடைத்துள்ளது.
- கடந்த ஆண்டை விட காணிக்கை மூலம் ரூ.13 கோடியே 28 லட்சத்து 45 ஆயிரத்து 705 கூடுதலாக வந்துள்ளது.
- அதே போல் அரவணை விற்பனை மூலம் கடந்த ஆண்டை விட ரூ.22 கோடியே 6 லட்சத்து 59 ஆயிரத்து 540 கூடுதலாக கிடைத்துள்ளது.
- மகர விளக்கை முன்னிட்டு தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு நிறைவடைந்த போதிலும் உடனடி தரிசன முன்பதிவு அடிப்படையில் தரிசனத்திற்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்படும். என அந்த பேட்டியில் கூறினார்.