மாநில அரசின் உரிமையை ஒன்றிய அரசு பறிக்கிறது! மாநிலங்களை ஒன்று திரட்டும் தமிழக அரசு!

Photo of author

By Rupa

மாநில அரசின் உரிமையை ஒன்றிய அரசு பறிக்கிறது! மாநிலங்களை ஒன்று திரட்டும் தமிழக அரசு!

Rupa

Chief who made the goose ride! Which field will be next?

மாநில அரசின் உரிமையை ஒன்றிய அரசு பறிக்கிறது! மாநிலங்களை ஒன்று திரட்டும் தமிழக அரசு!

மாணவர்களின் மருத்துவ கனவானது நீட்தேர்வு என ஒன்றை அமைத்ததால்  சுக்கு நூறானது. அது ஆரம்பித்த நாள் முதல் மாணவர்கள் தங்கள் கனவு நிறைவேறுமா என்று எண்ணத்தில் தற்கொலை முயற்சி செய்து கொள்கின்றனர்.அந்தவகையில் இம்முறை மட்டும் தமிழகத்தில் நான்கு பேர் தற்கொலை செய்து கொண்டனர்.இதனை எதிர்த்து தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஒன்றிய அரசிடம் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது வீரன் சட்டங்களாக எதிர்த்துப் போராடும் போராட்டத்தில் நீட்தேர்வு எதிர்த்துப் போராடுகின்றனர்.நீட் தேர்வு எதிர்த்து போராடுவதில் ஆதரவுக் குரலை தருமாறு 12 மாநில முதல்வர்களுக்கு மு.க ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.முதலில் மு.க ஸ்டாலின் அவர்கள் தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வு அடிப்படையிலான சேர்கை செயல்முறை சமூகத்தில் பின்தங்கிய மாணவர்களை பாதித்து உள்ளதா என்பதை கண்டறிய தமிழ்நாடு அரசு நீதியரசர் ஏ .கே ராஜன் தலைமையில் குழு அமைத்தனர்.

அவற்றை ஆராய்ந்து ஏ. கே ராஜன் தலைமையில் அறிக்கை ஒன்றை முதலமைச்சருக்கும் தாக்கல் செய்துள்ளனர்.அந்த அறிக்கையை அனைத்து  மாநிலங்களுக்கும் மொழிபெயர்த்து முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கடிதத்துடன் இணைத்து அனுப்பியுள்ளார்.அந்த கடிதத்தில் மருத்துவ படிப்பிற்கு மாற்றுவழிகள் செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் மற்றும் அத்தகைய நியாயமான மற்றும் சமமான முறைகளை செயல்படுத்த எடுக்க வேண்டிய சட்ட நடவடிக்கைகள் ஆகியவற்றை பரிந்துரைக்குமாறு அக்குழு கேட்டுக் கொண்டது.மேலும் இக் கடிதத்துடன் மேலும் நீதியரசர் ஏ. கே .ராஜன் அவர்களது குழுவின் பரிந்துரை பெரில் கடந்த தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தமிழ்நாடு கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை சட்டம் 2021 என்ற சட்ட முன்வடிவை நிறைவேற்றியது.

அதன் நகலையும் கடிதத்துடன் இணைத்து அனுப்பியதாக கூறி உள்ளனர். அதேபோல மாநில அரசுகளால் நிறுவப்பட்ட மருத்துவ நிறுவனங்களின் சேர்க்கை முறையை முடிவு செய்வதற்கான மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசே பறிப்பது அரசியல் அமைப்பு அதிகார சமநிலையில் மீறப்படுகிறது என்பதாகும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் கூறியுள்ளார். இது தொடர்பாக மாநில அரசுகள் உயர்கல்வி நிறுவனங்களில் அனுமதி பெறும் முறையை தீர்மானிப்பதில் தங்கள் அரசியலமைப்பு உரிமையும் நிலைப்பாட்டையும் நிலைநிறுத்த வேண்டும் என்று தங்கள் கருத்து தெரிவித்துள்ளார்.கிராமப்புற மாணவர்கள் மற்றும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறுவது சிரமத்திற்கு உள்ளாகி அதை தடுக்கும் அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களும் பாதிக்கப்படாமல் இருக்க உறுதி செய்ய தங்களது ஆதரவை தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த கடிதத்தை டெல்லி பஞ்சாப் ஆந்திரா போன்ற 12 மாநில முதல்வர்களுக்கு அனுப்ப உள்ளார். மாநில அரசுகளின் முதன்மையை மீட்டெடுக்க மாநில முதலமைச்சர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதுமட்டுமின்றி முக்கிய பிரச்சனைகளில் அனைவரது ஒத்துழைப்பும் தான் எதிர்நோக்குவது ஆகும் அவர் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி தமிழ்நாடு நீட் தேர்வை எதிர்த்து இவ்வளவு முயற்சிகள் எடுத்து உள்ளது குறித்து விளக்கியும் நீதியரசர் எஸ் .கே. ராஜன் குழுவின் நகலையும் அத்துடன் இணைத்து அனுப்பியுள்ளார்.