சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்த வழக்கில் மனுதாரக்கு 5 லட்சம் அபராதம்!

0
104
Petitioner fined Rs 5 lakh in Supreme Court dismissal case
Petitioner fined Rs 5 lakh in Supreme Court dismissal case

சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்த வழக்கில் மனுதாரக்கு 5 லட்சம் அபராதம்!

2013 ஆம் வருடத்திலிருந்து மருத்துவ நுழைவுத் தேர்வுக்கான நீட் தேர்வு கண்டிப்பாக நடத்தப்பட வேண்டுமென்று மத்திய அரசு நடத்தி வருகிறது. இதற்கு பல்வேறு எதிர்ப்புகள் வந்தாலும், பல்வேறு மாணவர்களின் உயிர் பிரிந்தாலும் மோடி அரசு இந்த எழுத்து தேர்வு இருந்தால் மட்டுமே மருத்துவத்தில் நுழைவு தேர்வு எழுதினால் மட்டுமே மருத்துவத் துறையில் படிக்க முடியும் என்று திட்டவட்டமாக அறிவித்தது.

நீங்கள் எந்த கட்சியாக வேண்டுமானால் இருங்கள். யார் என்ன செய்தாலும், என்ன சொன்னாலும் நீட் தேர்வு கண்டிப்பாக நடக்கும் என்ற ரீதியில் மத்திய அரசு அதை பொருட்படுத்தாமல், எப்போதும் போலவே தேர்வுகளை நடத்தி வருகின்றது.

கடந்த வருடம் நீட் தேர்வு கொரோனாவின் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. இந்த வருடமும் மாநில அரசு நீட் தேர்வுக்கு மறுப்பு  தெரிவித்தது. ஆனால் மத்திய அரசோ அதை கண்டுகொள்ளவேவில்லை. இந்த 2021 ஆம் ஆண்டுக்கான மருத்துவ நுழைவுத் தேர்வு கடந்த செப்டம்பர் 12 ம் தேதி அன்று நடைபெற்றது.

இந்த தேர்வின் போது வினாத்தாளில் சில இடங்களில் கசிந்துவிட்டது. அதன் காரணமாக இந்த தேர்வை ரத்து செய்து விட்டு மறு தேர்வு நடத்த வேண்டும் என உத்தரவு பிறப்பிக்க, சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை நாகேஸ்வர ராவ் மற்றும் கவாய் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

நீதிபதிகள் வெறும் 5 எப்.ஐ.ஆர் காப்பிகளை மட்டும் வைத்து ஏழரை லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியதை தடை செய்ய முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்துவிட்டனர். அதை தொடர்ந்து  மனுதாரருக்கு கடுமையான கண்டனம் தெரிவித்தனர்.

அதன் பின்னால் அபராதத் தொகையை மட்டும் ரத்து செய்யும்படி மனுதாரர் கேட்டுக் கொண்டதன் காரணமாக அதை மட்டும் ஏற்றுக் கொண்டு, அபராதத்தை நீதிபதிகள் பெருந்தன்மையான மனதுடன் ரத்து செய்தனர்.