ஒன்றிய அரசால் தமிழ்நாட்டில் 49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் பள்ளிகளில் ஹிந்தி மற்றும் சமஸ்கிருதம் கட்டாயம் மொழி பாடமாகவும் தமிழானது விருப்ப பாடமாகவும் உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
RTI மூலம் பெறப்பட்ட தகவலின் படி :-
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் படிக்கக்கூடிய 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஹிந்தி மற்றும் சமஸ்கிருதம் கட்டாய மொழி பாடமாகவும் தமிழானது விருப்பப்பட்டால் மட்டுமே விருப்பம் மொழி பாடமாக படிக்கலாம் என்ற நடைமுறை பின்பற்றப்படுவதாகவும் தெரிவித்திருக்கிறது.
ஜனவரி 28 2021 ஆம் ஆண்டு தகவலின் படி கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 100 ஹிந்தி ஆசிரியர்களும் 53 சமஸ்கிருத ஆசிரியர்களும் பணியாற்றி வருவதாகவும் ஒரு தமிழ் ஆசிரியர் கூட அந்த பள்ளியில் இல்லை என்றும் வெளியான தகவல்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளன. குறிப்பாக ஒரு வகுப்பில் 20 க்கும் மேற்பட்ட மாணவர்கள் விருப்பப்பட்டால் மட்டுமே தமிழாசிரியர்கள் நியமிக்கப்படுவர் என்றும் அவ்வாறு நியமிக்கப்படக்கூடிய தமிழ் ஆசிரியர்களுக்கு 25,000 தொகுப்பு ஊதியத்துடன் தற்காலிகமாக பணியில் வேலை பார்ப்பர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் இணைந்து தமிழ் மொழியினை விருப்பம் பாடமாக தேர்வு செய்தாலும் அந்த தமிழ் மொழி தேர்வானது மதிப்பெண் பட்டியலில் வராது என்பதாலே பலமானவர்கள் தமிழ் மொழியினை விருப்ப பாடத்தில் கூட ஏற்றுக் கொள்ள மறுத்து விடுவதாக ஆர் டி ஐ யின் தகவல்கள் தெரிவிப்பது தமிழ்நாட்டில் இருந்து தமிழை தூக்கி எறிவதற்காக ஒன்றிய அரசு வேலை பார்ப்பது போன்று அமைந்திருக்கிறது.