தொட்டாசிணுங்கி திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமா துறையில் நுழைந்தவர் தற்பொழுது சினிமா துறையில் புதிய பரிணாமத்தை எட்டி இருக்கிறார். 90 காலகட்டங்களில் ஆபாசமான காட்சிகள் இன்றி குடும்ப பங்கான காட்சிகள் நடித்து வெற்றி கண்ட நடிகையாக நடிகை தேவயானி பார்க்கப்படுகிறார்.
இவருடைய திருமணம் அன்று சினிமா காலகட்டத்தில் மிகப்பெரிய அதிர்ச்சி தகவலாகவே இருந்தது. திருமணத்திற்கு பின் திரையுலகில் நடிப்பதை விட்ட நடிகை தேவயானி அவர்கள் சமீப காலமாக மீண்டும் திரையில் தோன்றி பல படங்களில் நடித்து வருகிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இவர் நடித்த நிழற்குடம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இவருடன் இவருடைய தம்பியான நகுல் அவர்களும் கலந்து கொண்டிருக்கிறார். இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு இவர் தன்னுடைய அக்கா தேவயானி குறித்து சில சுவாரசியமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.
நடிகர் நகுல் தேவயானி குறித்து பேசி இருப்பதாவது :-
என் அம்மாவிற்கு பிறகு எனக்கு அனைத்துமே என் அக்கா தான் என்றும் அவரை தன்னுடைய அம்மா ஸ்தானத்தில் வைத்து தான் எப்பொழுதும் பார்ப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும், தன்னுடைய அக்காவிற்கு நடிகை என்ற முகத்தை தாண்டி மற்றொரு முகம் இருப்பதாகவும் அதை யாரும் பெரிதளவில் கண்டதில்லை என நடிகர் நகுல் அவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.
அதாவது, தனக்கு உறவுக்கார பையன் ஒருவனுக்காக பிரசாத் ஸ்டுடியோவில் கோர்ஸ் ஒன்றில் சேர்த்துவிடும் படி கேட்டதாகவும் அப்பொழுது தன்னுடைய அக்கா அங்கு சென்று தனக்கும் இயக்குனர் ஆக வேண்டும் என்ற ஆசை அதற்கான கோசில் இணைந்து 3 மாதங்கள் படித்ததாகவும் தெரிவித்திருக்கிறார். அதன்பின் கைக்குட்டை என்ற திரைப்படத்திற்கு இயக்குனராக தன்னுடைய அக்கா மாறிவிட்டார் என்றும் இது குறும்படமாக இருப்பினும் இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா அவர்கள் இசையமைத்தால் நன்றாக இருக்கும் என நினைத்த பட்சத்தில் அவரிடம் சென்று உங்களுக்கு இந்த படம் பிடித்திருந்தால் மட்டும் இதற்கு இசை அமைத்து தர முடியுமா என தன்மையாக கேட்டதாகவும் நகுல் குறிப்பிட்டு இருக்கிறார்.
என்னதான் மிகப்பெரிய நடிகையாக இருந்தாலும் தனக்கென தனி ரசிகர் படை இருந்தாலும் எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும் ஒருவரிடம் பணிவாக நடந்து கொள்வது தான் மிகப்பெரிய உயர்வு என்பதை தேவயானி மதித்து நடக்கிறார் என்றும் அவர் இளையராஜாவிடம் பேசிய மற்றும் நடந்து கொண்ட விதம்தான் தேவயானி உடைய மறுமுகம் என சுட்டிக்காட்டி இருக்கிறார் அவரின் தம்பி நடிகர் நகுல்.