மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்!! Indian oil வெளியிட்ட வெடிக்காத சிலிண்டர்.. இனி தீப்பற்றினாலும் பயம் இல்லை!!

0
4
Housewives are happy!! Indian Oil releases unexploded cylinder.. No more fear of fire!!
Housewives are happy!! Indian Oil releases unexploded cylinder.. No more fear of fire!!

கூட்டு எரிவாயு சிலிண்டர் என்ற புதிய விதமான சிலிண்டரை இந்தியன் ஆயில் நிறுவனமானது உருவாக்கியிருக்கிறது. இதனால் வீடுகளில் தீப்பற்றினால் கூட சிலிண்டர் வெடிக்கும் அபாயமானது கிடையாது என்றும் சிலிண்டரின் எடை குறைவாக இருக்கும் என்றும் இந்தியன் ஆயில் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது இல்லத்தரசிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

கூட்டு எரிவாயு சிலிண்டரின் பயன்கள் :-

✓ வீடுகளில் தீப்பற்றினால் இந்த கூட்டு எரிவாயு சிலிண்டர் வெடிக்காது. அதற்கு மாறாக சிலிண்டர் முழுவதுமாக தானே எரிந்து போய்விடும்.

✓ எந்த சூழ்நிலையிலும் தீப்பிடிக்காத அளவு பாதுகாப்பானதாக உருவாக்கப்பட்டிருக்கிறது.

✓ இந்த சிலிண்டர் துருப்பிடிக்காமலும் பார்ப்பதற்கு அழகாகவும் இருப்பதால் சமையலறையின் அழகை அதிகரித்து காட்டும் என்றும் தெரிவித்திருக்கின்றனர்.

✓ சாதாரண எரிவாயு நிரப்பப்பட்ட சிலிண்டர் 30 கிலோ வரை இருக்கும் நிலையில் இந்த கூட்டு எரிவாயு சிலிண்டர் 15.5 கிலோ வரை மட்டுமே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இல்லத்தரசிகள் இதனை எளிதாக கையாள முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

உங்களிடம் சாதாரண எரிவாயு சிலிண்டர்கள் உள்ளது என்றால் அதனை உடனடியாக உங்களுடைய விண்ணப்பதாரர்களிடம் அல்லது விநியோகஸ்தர்களிடம் சொல்லி விண்ணப்பங்கள் மூலமாக மாற்றிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சாதாரண எரிவாயு சிலிண்டர்களுக்கு 2200 முன்பணம் கட்டுவது போல இந்த எரிவாயு சிலிண்டர்களுக்கு கூடுதலாக 800 ரூபாய் சேர்த்து 3000 ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Previous articleஎங்களுக்கு என்ன சொல்றதுன்னே தெரியல!. கேங்கர்ஸ் படம் பற்றி வடிவேலு பேட்டி!…
Next articleநடிகை தேவயானி இளையராஜாவிடம் பேசிய விதம்!! என் அக்காவின் மறுமுகம் இதுதான்.. நகுல் தெரிவித்த உண்மை!!