பாதுகாப்பு படையினர் பயன்படுத்திய ஆயுதங்கள் கொள்ளை!! மணிப்பூரில் மீண்டும் பரபரப்பு!!

Photo of author

By Jeevitha

பாதுகாப்பு படையினர் பயன்படுத்திய ஆயுதங்கள் கொள்ளை!! மணிப்பூரில் மீண்டும் பரபரப்பு!!

மணிப்பூரில் இரண்டு பழங்குடியினர்கள் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையாக வெடித்தது. இதுவரை  இன்னும் வன்முறையானது முடிவுக்கு வரவில்லை. சில நாட்கள் முன்பு  இரண்டு பழங்குடியின பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக வீதிகளில் அழைத்துச் செல்வது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. இந்த கும்பல் அந்தப் பெண்கள் இருவரையும் வயல்வெளியில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது.

இந்த நிகழ்வு கடந்த மே மாதம் 4-ந்தேதி கங்போக்பி மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. மே 3-ந்தேதி நடைபெற்ற பேரணியின்போது வன்முறை வெடித்தது. அதில் இருந்து மணிப்பூர் எரிந்து வருகிறது. 3-ந்தேதி வன்முறை வெடித்த நிலையில் அடுத்த நாள் இந்த கொடூர சம்பவம் நடைபெறுள்ளது.

இந்த நிலையில் முக்கிய குற்றவாளி இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளர்கள் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து இதுவரை  வன்முறை நீடித்து வரும் நிலையில்  சில நாட்கள் முன்பு பாதுகாப்பு படையினர் பயன்படுத்திய இரண்டு பேருந்திற்கு வன்முறையில் ஈடுப்பட்ட ஒரு கும்பல் தீ வைத்துள்ளது.

ஆனால் அந்த பேருந்துகளில் பாதுகாப்பு படைவீரர்கள் யாரும் இல்லாத காரணத்தால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஒரு கும்பல் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் 2 பாதுகாப்பு செக்போஸ்ட்யை ஒரு கும்பல் சூறையாடி உள்ளது. மேலும் பாதுகாப்பு படையினர் பயன்படுத்திய ஆயுதங்கள் மற்றும்  வெடிபொருட்களை கொள்ளை அடித்துள்ளது.

அதனை தொடர்ந்து சிங்ஜமெய் களவல் நிலையத்திற்குள் சென்று ஆயுதங்களை கொள்ளையடிக்க முயற்சி செய்தது. ஆனால் அந்த முயற்சியை காவலர்கள் தடுத்துள்ளார்கள். மேலும் மணிப்பூர் வன்முறையில் தொடர்பாக இதுவரை 1047பேர் கைது செய்யப்பட்டுள்ளர்கள.

இதனையடுத்து பாதுகாப்பு படையினர்கள் 127 செக் போஸ்ட்களை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வருகிறார்கள். மேலும் இந்த வன்முறையில் இதுவரை 160 க்கும் மேற்பட்ட பேர் உயிரிழந்து உள்ளார்கள். மேலும் நூற்றுக்கணக்கான பேர் பலத்த காயமடைந்துள்ளார்கள்.