ஒரே மாதிரியான பாடத்திட்டம்!! “பயப்பட வேண்டாம் நான் பார்த்து கொள்கின்றேன்” அமைச்சர் பொன்முடி பேச்சு!!

0
49
Identical syllabus!!
Identical syllabus!! "Don't be afraid I will take care" Minister Ponmudi speech!!

ஒரே மாதிரியான பாடத்திட்டம்!! “பயப்பட வேண்டாம் நான் பார்த்து கொள்கின்றேன்” அமைச்சர் பொன்முடி பேச்சு!!

தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடப்பு கல்வி ஆண்டிற்கான முதலாம் ஆண்டு மாணவர்களின் சேர்க்கை மட்டும் 85 ஆயிரம் இடங்கள் நிரம்பியது.

தமிழகத்தில் மட்டும் மொத்தம் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளது. இதுவரை மட்டும் 84899 இடங்கள் நிரப்பப்பட்டது அதில் 36626  மாணவர்கள் மற்றும் 48275 மாணவிகள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்த்துள்ளனர்.

இந்தநிலையில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்பு வருகின்ற ஜூலை 1 ம் தேதி துவங்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றனர். மேலும் அரசு மற்றும் அரசு உதவி பெரும் கல்லூரிகளும் தொடங்கப்பட உள்ளதால்  மாணவர்கள் உற்சாகத்துடன் வருகை தந்து கொண்டிருக்கின்றனர்.

இப்பொழுது வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது.அடுத்த கட்டமாக தேர்வுகள் நடத்தப்பட்ட உள்ளது.மேலும் அனைத்து கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் அனைவருக்கும்  75 சதவீதம் ஒரே மாதிரியான பாடத்திட்டம் வடிவமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த முறை அடுத்த கல்வியாண்டிற்கு நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.அதிலும் தனியார் கல்லூரிகள் 25 சதவீத பாடத்திட்டத்தை  கட்டாயம் மாறுதல் செய்ய வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது.

மேலும் இந்த திட்டத்திற்கு பல தனியார் கல்லூரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுவரை அனைத்து கல்லூரிகளிலும் வெவ்வேறு பாடத்திட்டங்கள் நடத்தப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது முதன் முறையாக ஒரே மாதிரியான பாடத்திட்டங்கள் நடதப்படுள்ளது.

இந்த திட்டத்தில் பல சிக்கல்கள் இருப்பதாகவும் இதனால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்றும் கருத்துகள் வெளிவருகின்றது.

எனவே இந்த திட்டம் செயல்படுவது தொடர்பாக கல்லூரி தாளாளர் ,முதல்வர் ,ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவரிடமும் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட உள்ளது .இதில் பெரும்பாலான அமைச்சர்கள் ஏற்கவில்லை .

மேலும் இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் இது 900 பேராசிரியர்களை கொண்டு நடத்தப்பட உள்ளதாகவும் ,நவீன பாடத்திட்டமாக இருக்கும் எனவும் கூறினார்.

இதனை தொடர்ந்து இது நல்ல பாட திட்டம் ,யாரும் பயப்பட வேண்டாம் என்றும் நான் பார்த்து கொள்கின்றேன் என்று கூரியாதாக தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
Parthipan K