நெசவு தொழிலாளி வீட்டு பூட்டை உடைத்து பணம் கொள்ளை! சுற்றுலா சென்று திரும்பிய நிலையில் அதிர்ச்சி சம்பவம்!

Photo of author

By Rupa

நெசவு தொழிலாளி வீட்டு பூட்டை உடைத்து பணம் கொள்ளை! சுற்றுலா சென்று திரும்பிய நிலையில் அதிர்ச்சி சம்பவம்!

Rupa

The weaver broke the house lock and stole money! Shocking incident while returning from a trip!

நெசவு தொழிலாளி வீட்டு பூட்டை உடைத்து பணம் கொள்ளை! சுற்றுலா சென்று திரும்பிய நிலையில் அதிர்ச்சி சம்பவம்!

அரியலூர் ஜெயங்கொண்டம் அருகே உள்ள செங்குந்தபுரம் மூன்றாவது குறுக்கு தெருவில் வசித்து வருபவர் கமலக்கண்ணன். இவர் பட்டு நெசவுத் தொழில் செய்து வருகிறார்.
கமலக்கண்ணனும் அவரது மனைவியும் வீட்டை பூட்டிவிட்டு கன்னியாகுமரிக்கு சுற்றுலா செல்ல கடந்த 29ஆம் தேதி சென்றுள்ளனர். நேற்று இரவு கன்னியாகுமாரியில் இருந்து திரும்பிய கமலக்கண்ணன் வீட்டின் முன் பகுதியில் கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, முன் கதவு பூட்டும் பாறையால் நெம்பி உடைக்கப்பட்ட நிலையில் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து உடனடியாக ஜெயங்கொண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.இது குறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தில் சென்று பார்த்த போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 1 லட்சத்து 5 ஆயிரம் பணம் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து அரியலூரில் இருந்து கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு கைரேகை பதிவுகளை சேகரித்து விசாரித்து வருகின்றனர்.அடுத்தடுத்து கொள்ளை சம்பவத்தால் ஜெயங்கொண்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.